சாகுந்தல நாடக ஆராய்ச்சி
வ
295
னிய பாடல்களை அமைத்துள்ளார். துயர்தாங்கிச் சோர்ந்து செல்லும் சகுந்தலையின் வழித்தடங்களில் கொழுந்தாமரைகள் நடைத்துயர் தீர்க்கவும், அடர்ந்த நிழல்தரு வளமரங்கள் கொடிய கதிர் வருத்தம் களைந்து களிப்பூட்டவும் கமுகுக் காய்கள் கழிந்த மலர்த்துகள் போல் கடுமையிழந்து புழுதியடி கலந்திடவும் மென்காற்று உலவிடவும் வேண்டி அடிகளார் பாடியுள்ள பாடல் குறிப்பிடத்தக்கதாகும்.49
இறைவழிபாட்டிலும் இனிய தமிழ்நலங் கண்டு பாடியவர் அடிகளார். இறைநலனும் தமிழ்நலனும் இரண்டறக் கலந்து விளங்குதலைக் கண்டு காட்டியுள்ளார் அடிகளார். ஒவெனும் தனிச்சிறப்பு வழக்கினையும் இறவா இன்பப் பெரும் புகழ் வாழ்வினையும் தமிழுக்குத் தந்த இறைநிலை போற்றி,50
“நாடகத் தமிழ்நூல் நன்கனம் வகுக்கஎன் நாவினும் உணர்வினும் நலக்க இயங்கி நன்றருள் புரிந்திடல் வேண்டும்
மன்றி லாடும் மதிமுடி யோயே’’51
எனத் தமக்கு நாடக நூற்றிறன் வழங்க வேண்டுகிறார் அடிகளார். அம்மையப்பனாகவும் அழகுச் சடை கொண்டு தோலணிந்த ஆண்டவனாகவும் முப்புரங்களையும் மும்மலங் களையும் செற்ற முழுமுதற் கடவுளாகவும் இறைவனைப் பாடியுள்ளார் அடிகளார்.52
அடிகளார் நாடகங்களில் காதலின்பமும் கவிதைச்
சுவையும் மிக்க பாடல்கள் மிகுதியாக உள்ளன.
கொவ்வைக் கனியைக் குறைத்த இதழுங் குயில்போற் பயில்மொழியும் நவ்வியனைய மதர்விழியும் நறவு வார மணங்கமழும் மௌவற் கொடிபோற் துவள்வடிவும் வாய்ந்த நங்காய் இருபளிங்குங் கௌவி யிடைசேர் மலர்நிறம்போல் இருவே முளமுங் கழுமுமால்'
9953
இப்பாடலில் கொவ்வைச் செவ்வாய், குயில்மொழி, மான்விழி, தேன்சுவை, மணமலர்க் கொடியுடல் எனப் பெண்ணழகு போற்றுகிறார் அடிகளார். மேலும் தேன்மொழி, மீன்விழி மின்னற்கொடி, தவப்பயன் என்றவாறு நிலைகளைப் பாராட்டும் வகையில்,
பல