298
மறைமலையம் - 7
நாடகக் கரு, கதை, நாடகக் கூறுகள், மொழியாக்க முறை, ஆராய்ச்சி ஆகிய அனைத்து நிலைகளிலும் அடிகளார் திறன் சிறந்து விளங்குகிறது. சாகுந்தலம் மொழிபெயர்ப்பின்வழி, மொழியாக்க முறைகளுக்கு ஒரு முன்னோடியாகவும், தமிழ் நாடக உலகினுக்கு ஒரு நற்கொடையாளராகவும் அடிகளார் விளங்குகிறார். காளிதாசரின் கலைப்படைப்பு, அடிகளாரின் ஆழ்புலமையாலும் அழகுத் தமிழாலும் எல்லோர்க்கும் இன்பம் பயக்கும் எழிற் கருவூலமாக விளங்குகிறது.
ப
உ
'அம்பிகாபதி அமராவதி' நாடகத்தில் அடிகளாரின் தனி நாடக நூல் ஆக்கத்திறம், மனித உளப் பண்பாடுகள் உணர்திறம் ஆகியன வெளிப்படுகின்றன. சுவைமிகு விறுவிறுப்போடும் நிகழ்ச்சிக் கோவைகள் நாடகத்தில் சிறப்புற அமைக்கப் பெற்றிருக்க வேண்டும். இத்தகு இயல்புகளில் ‘அம்பிகாபதி அமரவாவதி' சிறந்து விளங்குகிறது. 'சாகுந்தல நாடக ஆராய்ச்சி' அறிவு நலன் பெருக்கும் இனிய நூலாகும். இந்நூலில் கால ஆய்வு, கருத்து ஆய்வு, ஒப்பாய்வு, திறனாய்வு ஆகிய பல்நிலை ஆய்வுகளையும் அடிகளார் மேற்கொண்டுள்ளார். சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்றும், நாடகாசிரியர் என்றும், நாடகநூல் ஆராய்ச்சியாளர் என்றும் முப்பெரும் பெருமை களை அடிகளார்க்கு வழங்குவன அவர்தம் நாடக நூல்களாகும்.
இணைப்பு
சகுந்தலையின் கடிதம்
1. மறைமலையடிகள்
66
―
தமிழாக்கங்கள்
இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றான் என்னுடம்பை எழிற்காமன்! நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா றுணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ?"
2. ரா. இராகவையங்கார்
“அருவில் லவனின் னிடனே பதியும்
அகமூர் விழைவே னுடையங் கமெலாம் இரவும் பகலும் வலிதே சுடும்வேள்
இவணின் னிதயம் பிறிதோர் கிலனே!