பக்கம்:மறைமலையம் 7.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

3. ச. பாவனந்தம் பிள்ளை

66

‘உனதுமன மின்னதென வுத்தமனே நானறியேன் எனதுடலை இரவுபகல் எரிக்கின்ற துனதாசை தனதுவலி யான்மனது தவிக்கின்றேன் இரக்கமிலாய்! எனதுநிலை யறிந்தென்மேல் இரங்கினா லாகாதோ”

4. ஆ.கு. ஆதித்தர்

“அருளின் மன்னவ திருவுள மறியேன்

உருவும் உளமும் உனைநினைந் துருக இரவும் பகலும் மாரவேள் வந்து

இரக்கமே இன்றி ஒறுத்தற்கோ முறையோ?”

5. க. சந்தானம்

299

“உனதுள்ளம் யான் அறியேன் உன்னிடம் ஆசைகொண்ட அங்கங்களை இரவும் பகலும் இடைவிடாமல் கருணையின்றிக் காமன்காய்கின்றான்." 6. சி.எஸ். சச்சிதானந்த தீட்சிதர்

உனது மனதை அறிகிறேனில்லை. எனக்கு மன்மதன் பகலிலும் இரவிலும் எரித்தலும் செய்கிறான். ஓ, தயவில்லாத வரே! உன்னிடம் விருப்பமுள்ள என் மனதை அடைந்து அதிக ஸந்தாபத்தை உண்டு பண்ணுகிறான்.

7. நவாலியூர் எஸ். நடராசன்

கொடிய உள்ளம் படைத்தவரே, உங்கள் மனதை நான் அறியேன். ஆனால் உங்களிடத்து மாறாக் காதலுள்ள என்னை மன்மதன் இரவுபகலாய்ப் பெரிதும் வாட்டுகிறான்.

(தொகுப்பு:டாக்டர் இரா. குமரவேலன், 'தமிழில் நாடக இலக்கியம்' பி.எச்.டி.பட்ட ஆய்வேடு, சனவரி, 1972, தட்டச்சுப் படி, ப. இணைப்பு 38)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/324&oldid=1578455" இலிருந்து மீள்விக்கப்பட்டது