பக்கம்:மறைமலையம் 7.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருப தாம் நூற்றாண்டின் முதலிலும் வாதம் புரிவதற்கென்றே ஒருவரை ஒருவர் கூட்டத்துக்கு அழைத்துக் களிப்பெய்து வார்கள். அடிகள் எதற்கும் அஞ்சுவதில்லை; ‘உடையார் ஒருவர் தமர் நாம்; அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை' என்று அருள் உரங் கொண்டு தோள் தொட்டு ஆர்ப்பரித்துக் களம் புகுவர். ஞான இளஞ்சூரிய னாய்த் தோன்றி அங்கங்கும் முதிர்ந்தெழுந்த அறியாமை இருட் படலங்களைக் கிழித் தொதுக்கியும், சிங்க ஏறு போல் களத்தில் ஒரு தனிப் பேருருவாய் உலவியும், வீறு மிக்கவர் களாய் விளங்கினார்கள். அடித்தள காலத்தில், வாதத்துக் கழைத்தவரே அடிகளாரைக் கண்ட மாத்திரத்தில் வெருண்டு நிலைகலங்குவர்.

- சிவத்திரு அழகரடிகள்

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/330&oldid=1578461" இலிருந்து மீள்விக்கப்பட்டது