10
-7
மறைமலையம் 7
துள்ளியும் விளையாடுதலை எவரும் பார்த்திருக்கலாம். தோழமைகொண்ட இரண்டு நாய்கள் பொய்யாக ஒன்றை யொன்று கௌவியும். ஒன்றோடொன்று முன்கால்களாற் பிணைந்தும், ஒன்றைவிட் டொன்று அப்புறங் குதித்தோடி மீண்டு வந்து கௌவியும், ஒன்றை யொன்று நோக்கியபடியாய்ப் பதுங்கியும், ஒன்று ஒன்றன் மேற் பாய்ந்தும் இங்ஙனமெல்லாம் விளையாட்டயர்ந்து மகிழ்தலை எவரும் பார்த்திருக்கலாம். இன்னும் வெளி நிலங்களிலும் மலைச் சாரலின் கண் உள்ள பள்ளத்தாக்குகளிலும் மேயும் ஆடுமாடுகள் புல் மேய்ந்தபின் ஒன்றோடொன்று முட்டியும், ஒன்றன்மேலொன்றேறியும், ஒன்று துரத்த மற்றொன்று வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடியும், துள்ளியும் விளையாடிக் களித்தலை அங்குச் சென்றவர்கள் பார்த்திருக்கலாம்.
இங்ஙனமே மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்களும் பல வகையான விளையாடல்களால் தம் ஒழிவு நேரங்களைக் களிப்புடன் கழித்து வருகின்றன. மக்களல்லாத மற்றை யுயிர்கள் பகுத்தறிவு இல்லாதனவாகலின், அவை தம்முடைய விளையாட்டுக்களை ஓர் ஒழுங்கான முறையில் விளையாடவும், அவை தம்மைப் பிறவுயிர்களுக்கு ஒழுங்கான முறையில் விளையாடிக் காட்டவும் வல்லன அல்ல. மற்று, மக்களோ தமக்குள்ள பகுத்தறிவு வன்மையால் தாம் விளையாடும் வகைகளை ஓரொழுங்குபட அமைத்துக்கொள்வதுடன், தம்மோ டொத்தார்க்கும் அவை தம்மை ஓர் ஒழுங்குறக் காட்டி அவர்க்குப் பெருமகிழ்ச்சியினை விளைவித்தும் வருகின்றனர். இவ்வாறு மக்கள் ஓர் ஒழுங்கான முறையில் விளையாடும் விளையாடல்கள் அத்தனையும் முதலில் எவ்வாறு தோன்றலாயின வெனின்; முதிர்ந்த பருவத்தினராயிருக்கும் மக்கள் துவக்கத்தில் எந்த நிலையினராயிருந்து எவ்வாறு விளையாடினரென்பதை ஆராயவே அவைதோன்றிய வுண்மை
தெற்றென விளங்காநிற்கும்.
பார்மின்கள்! நாம் விளையாடும் பருவத்துச் சிறுவர் சிறுமிகளாய் இருந்த ஞான்று எங்ஙனம் விளையாடினோம்? சோறு சமைக்கும் விளையாட்டும், 'பெண்ணு மாப்பிளை' வைத்து மணஞ் செய்விக்கும் விளையாட்டும் அல்லவோ