சாகுந்தல நாடக ஆராய்ச்சி
11
விளையாடினம்? ஏனைச் சிற்றுயிர்களைப்போலவே, மக்களும் பசி காமம் உடையர்; என்றாலும், பசித்தபோது ஒழுங்கான முறையில் உணவு சமைத்து உண்ணவுங், காமவேட்கை யெழுந்தபோது ஒழுங்கான முறையில் ஆணும் பெண்ணுமாக மணந்து காமவின்பம் நுகரவும் மக்கள் ஒழுங்கான அறிவுமுயற்சி வாய்ந்தவராயிருத்தல்போல, விலங்கினங்கள் வாய்ந்தவாகாமை தெளியக்கிடந்த தொன்றாம், மக்கள் செய்யும் முறையான அறிவுமுயற்சிகள் எல்லாம் வ்வாறு சமையற்றொழிலும் மணவினையும் என்னும் இரண்டில் வந்தடங்கி ஒழுங்காக நடைபெறக் காண்டலின், அவர் தஞ்சிறுவர் சிறுமிகளுந் தாமுஞ் சோறு சமைத்தும் பெண்ணு மாப்பிளை வைத்து மணம்புரிவித்தும் விளையாட்டு அயரா நிற்கின்றனர். ஆகவே, பிற்பருவத்தில் மக்கள் அயரும் பல்வேறு விளையாடல்களுக் கெல்லாம் முற்பட்டு முதலாய்நிற்பன சிறார் அயரும் இவ் விருவகை விளையாட ல்களேயா மென்பது தெற்றென உணர்ந்து கொள்ளப்படு மென்க.
இனித், தம் பெற்றா ருற்றார் செய்யுஞ் செயல்களைக் கண்டு அவற்றைப்போல் தாமுஞ் செய்து விளையாட்டு அயர்வதிற் சிறுமகார்க்கு உண்டாம் மகிழ்ச்சியின் இயல்பினை ஆழ்ந்து ஆராயுங்கால், ஓர் ஒழுங்கான அமைப்பையும் ஒரு கிளர்ச்சியான செயலையுங் கண்டு அவைபோற்றாமுஞ் செய்தலிலும், அல்லது அவைபோற் செய்து காட்டப்படுங் காட்சியிலுமாக மக்கள் பெரிதும் இன்புறுந்தன்மையரென்பது நன்கு புலனாகாநிற்கின்றது.சிறுமகார் தம் பெற்றோர் செய்யுஞ் சமையற் றொழிலைப் பார்த்துத் தாமும் மணற்சோறு சமைத்து இன்புறுதல் போலவே ஆண்டு முதிர்ந்தவர்களுந் தம்மாற் பாராட்டப்படுவார் செய்யும் நல்வினை தீவினைகளைப் பார்த்து அவர்போற் றாமுஞ் செய்து இன்புறுகின்றனர். கல்வியறிவிலுஞ் சொல் வன்மையிலுஞ் சிறந்தார் ஒருவர் ஓரவைக்களத்தேறிக் கடவுளின் அளவிறந்த ஆற்றலையும் அவர் எண்ணிறந்த உலகங்களையெல்லாம் வான்வெளியிற் பந்துகள்போல் வைத்துச் சுழற்றுதலையும் அவ் வுலகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள எண்ணிறந்த உயிர்களுக்கும் எண்ணிறந்த வியத்தகும் உடம்புகளைக் கொடுத்து அவர் அவை தமக்கு அறிவுவிளங்கச் செய்துவரும் அருட்டிறங்களையும், நாம்
L