12
மறைமலையம் - 7
நம் கண்ணெதிரே காண்பதுபோல் எடுத்துரைத்து நம் அறிவையும் அன்பையுங் கவர்ந்து சென்றக்கால், நாம் அதனால் அவர் வயமாகி அவரைப்போற் பேசவும் அவரைப் போற் கைகால் அசைக்கவும் விழைகின்றனம் அல்லமோ? அவ்விழைவு மீதூரப் பெற்றக்கால் அவர்போல் அவைகளைச் செய்யக் கற்று நாம் மகிழ்தலும் உண்டன்றோ? இங்ஙனம் நல்வினை செய்வாரைக் கண்டு நாமும் அவர் போற் செய்யவுஞ் செய்து மகிழவும் முனைந்து நிற்றல் போலவே, தீவினை செய்வாரைக் கண்டும் அவர்போற் செய்யவுஞ் செய்து மகிழவும் முனைந்து நிற்பாரும் உலகில் மிகப் பலரா யிருக்கின்றனர். கடவுள் இல்லையென்றும்,
எல்லாம்
இயற்கையே யென்றும், ஊன் உண்டல், கட்குடித்தல், வரை துறையின்றி மருவல், ஏமாந்தவர் பொருளைக் கவர்தல், ஏமாறாதவரையும் ஏமாற்றுதல், அறிவில் ஏற்றத் தாழ்வின்மை யின் ஒருவர் ஏனையொருவர்க்கு அடங்கா தொழுகுதல் முதலிய வினைகளையெல்லாம் அவரவர் தத்தம் வன்மை மென்மைகட் கேற்பச் செய்தல் குற்ற மாகாதென்றும் ஆரவாரத் தோடு உரையாடுவார் திறத்தைக் கண்டு அவரை வியப்பாரும், அவர் போற்செய்ய விரும்பு வாரும், செய்தொழுகுவாரும் வரவர மிகுதல் காண்டுமன்றோ? இன்னும் ஒரு மலைச் சாரலை யும் அதன் கீழுள்ளதோர் ஏரிக் கரையில் மான்மந்தைகள் நீரருந்தி நிற்றலையுங் கண்டு மகிழும் மகிழ்ச்சியைவிட, அக் காட்சியினை எள்ளளவும் பிசகாமல் வரைந்து வைத்திருக்கும் ஓர் ஓவியத்தினைக் கண்டு அதனை வியந்து மகிழும் மகிழ்ச்சி நம்பால் மிகப் பெரிதா யிருக்கின்ற தன்றோ? இங்ஙனமே, நாம் ஓர் அரசனையும், அவன் அர யையும், அவன்றன் அமைச்சர் படைத்தலைவர் படையாட் களையும், அவனை எதிர்க்கும் அவன்றன் மாற்றரசர் அவனுக் குரியார்கள் முதலாயினாரையுங் காண நேரும் போதும், அவர் உரையாடுவனவற்றைக் கேட்க நேரும் போதும், அவர் செய்யுஞ் செயல்களைப் பார்க்க நேரும் போதும் அச்சத்தொடு விரவிய ஒருவகை மகிழ்ச்சியினை அடைகின்றனரேனும், அம் மகிழ்ச்சி, அவர்களைப்போற் கோலம்பூண்டு அவர்களைப் போல் உரையாடி அவர்களைப் போல் நடமாடிக்காட்டும் நாடகக்காரரைக் கண்டு நாம் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடாக
சி