14
―
மறைமலையம் 7
இனி, உலகநடையில் முதன்மையுற்றுத் தோன்றும் இருவகை நிகழ்ச்சிகளை இங்ஙனம் ஒப்புமை வகையால் உள்ளடக்கிய இவ்விருவகைச் சிறார் விளையாட்டுக் களிலிருந்தே, இம்மலர் தலையுலகிற் பலதலைமுறையாய்ப் பரந்து விரிந்த நிகழ்ச்சிகளை யெல்லாங் கண்ணாடிபோற் றன்னகத்தே பொதிந்துவைத்து விளங்கக் காட்டும் நாடகம் ஆகிய மாந்தர் விளையாட்டுத் தோன்றலாயிற்றென்றுணர்தல் வேண்டும், நாடகம் என்னுஞ்சொல் விளையாட்டு என்னும் பாருளை யுடையதென்பதற்கு மாணிக்க வாசகப் பெருமான் அருளிச்செய்த,
66
'புகவே தகேன் உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே! தகவே எனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே யுயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே! நகவே தகுமெம் பிரான்என்னை நீசெய்த நாடகமே!”
(திருச்சதகம், 10)
என்னுந் திருவாசகச் செய்யுளே சான்றாம். இன்னும், பொது மக்கள் எல்லாரும் நாடகத்தை ‘ஆட்டம்' என்று வழங்கி வருதலும் உற்றுநோக்கற்பாற்று. இன்னும் இது ‘குதி' என்னும் முதனிலையிற்றேன்றிய 'கூத்து' என்னுஞ் சொல்லானும் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, விளையாட்டு, நாடகம், ஆட்டம், கூத்து என்னுஞ் சொற்களெல்லாம் முதலில் ஒரே பொருளை யுணர்துவனவாய்ப், பின்னர் நாடகமுறைகள் பல்கப் பல்கச், சிறிது சிறிது பொருள் வேற்றுமை யுடையவாயின வென்க.
L
இனி நாடகம் ஆடும்வகை துவக்கத்திலிருந்தே எவ் வெவ்வாறு மாறுதலெய்தி வரலாயிற்றென்பது ஆராயற் பாற்று. ஒருவனையும் ஒருத்தியையும் வைத்து மணம் புரிதலைக் காணுஞ் சிறார்கள் தாமும் அங்ஙனம் மணஞ் செய்வித்து விளையாடத் தொடங்குகையில், மணமகனுக்கு அடை யாளமாக ஆண்வடிவாய்ச் சமைத்த ஒரு மரப்பாவை யினையும் மணமகளுக்கு அடையாளமாகப் பெண்வடிவாய்ச் சமைத்த ஒரு மரப்பாவையினையும் ஒருங்குவைத்து, அவை தமக்குத் தாம் அறிந்தவாறு ஆடையணிகலன்கள் அலங்கல் சாத்தி ஒப்பனை