சாகுந்தல நாடக ஆராய்ச்சி
15
செய்து விளையாடல் கண்டாமன்றோ? அதுபோலவே, ஆண்டில் முதிர்ந்த இளைஞரும் பிறருந் தாம் முதன்முதற் றுவங்கிய நாடகத்தையும் மரப்பாவைகள் கொண்டே நடத்திக் காட்டினர். இது ‘பாவைக் கூத்து' என்றும் 'பொம்மலாட்டம்’ என்றும் இன்று காறும் வழங்கி வருகின்றது. யாம் சிறு பிள்ளையா யிருந்த காலத்தில் அரிச்சந்திரநாடகம் முற்றும் அழகிய பாவைக் கூத்தில் வைத்துத் திறம்பட நடத்தப்பட்ட தனைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேம்.
இங்ஙனம் மரப்பாவையாற் சமைத்த பாவைகளைக் கொண்டு நாடகம் நடத்தப்படுதல் போலவே, தோலாற் சமைத்த பாவைகளைக் கொண்டும் நாடகம் நடத்தப்படுதல் பண்டைக் காலந்தொட்டே யுளதென்பது சிலப்பதிகார அரங்கேற்றக்காதை’க்கு அடியார்க்கு நல்லார் உரைத்த வுரையால் நன்கறியப்படும். ஆனாலும், இவ் விருவகைக் கூத்தில் 'மரப்பாவைக் கூத்தே ஏனைத் 'தோற்பாவைக் கூத்து’க்கும் முற்பட்ட தென்பது, "தோற்பாவைக் கூத்துந் தொல்லை மரப்பாவை யியக்கமும்” என்னுஞ் சிவஞான சித்திச் செய்யுளிற் பழமைப்பொருடருந் தொல்லை என்னுஞ் சொல் மரப்பாவைக் கூத்துக்கு அடைமொழியாய் நிற்றலால் தெளியப்படும். எனவே, மரப்பாவை தோற்பாவைகளாலேயே முதன்முதல் நாடகம் காட்டப்பட்டதென்பது உணர்ந்துகொள்க. பழநூலாகிய மாபாரதத்தின் கண்ணும் (3,30,23,5,39,1) பாவைக்கூத்து மொழியப் பட்டிருத்தலானும், ஆசிரியர் குணாட்டியராலே இயற்றப்பட்ட பிருகத்கதையில் அசுரர்க்குத் தச்சனான மயன் என்பவனின் புதல்வி தன் றோழிக்குப் பாவைக்கூத்துக் காட்டி அவளை மகிழ்விப்பவள் என்பது கூறப்பட்டிருத்தலானும் இது வடநாட்டின் கண்ணும் பண்டைநாளிற் பரவியிருந்தமை நன்குணரப்படு மென்க.
நடத்திக் வடமொழிப்
இனி, உயிரற்ற பாவைக்கூத்தில் வைத்து மாந்தரின் உலகியலொழுக்கத்தை நடத்திக் காட்டுவது பேருழைப் பினையும் பெருவருத்தத்தினையுந் தருவதல்லாமலும், உயிருள்ள மக்களின் குணங்குறிகளை உண்மையில் உள்ளபடியே புலப்படுத்துதற்கும் ஆகாமையின் அவ்விடர்ப்பாடு கண்டு, பின்னர் இளைஞர்களையே நாடகம்ஆடப் பழக்கி அவர்கள்