17
2. நாடக வரலாறு
L
இனி, முதல்முதல் நாடகமானது சிவபிரானாலும் உமைப் பிராட்டியாராலும் ஆக்கப்பட்டதென்றும், சிவபிரானால் வகுக்கப்பட்டது. 'தாண்டவம்' என்னும் பெயர்த்தாய் ஆண் மக்கள் மும்முரமாய் ஆடுங் கூத்தாமென்றும், உமைப் பிராட்டி யாரால் வகுக்கப்பட்டது. 'லாஸ்யம்’ என்னும் பெயர்த்தாய் நிலத்தினின்றும் மேல்எழாத அடிகளின் அசைவொடு முன்னும் பின்னுமாக ஆடிச்சென்று கை கண் புருவம் இதழ் முதலிய உறுப்புக்களாற் காதல் காதல் நிகழ்ச்சியினைப் புலப்படுத்தி சையுடன் கூடி இனிது நடைபெறுங் கூத்தாமென்றுந் தசரூபகங் கூறாநிற்கின்றது (1,10)
ம
க
இங்ஙனமே முத்திராராட்சசமும் மாலதிமாதவமும் நுவலுதல் காண்க. காளிதாசருந் தாமியற்றிய L மற்றொரு நாடகமாகிய மாளவிகாக்கி நிமித்திரத்திற் 'கணதாசர்' என்னும் நாடக ஆசிரியர் வாயிலாகச் சிவபிரானும் அம்மை யுமே நாடகத்தை முதன் முதல் ஆக்கினோராவ ரென்பதனைத் தெளிவுறுத்தல் கருத்திற் பதிக்கற்பாற்று. மேலுங், கி.மு.700ஆம் ஆண்டில் அஃதாவது இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்குமுன் இருந்தவராக முடிவு செய்யப் பட்டிருக்கின்ற பாணினி முனிவர்' தமது ‘அட்டாத்தியாயி' யிற் குறிப்பிட்டிருக்கும் ‘நட சூத்திரங்கள்’ என்னும் நூல் இஞ்ஞான்று ‘நாட்டிய சாஸ்திரம்’ என்னும் பெயரால் வழங்கிவருகின்றது, எனவே, இந்நூல் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னமே இயற்றப்பட்ட மிகப் பழைய நூலாதல் தானே போதரும். இத்துணைப் பழையதாகிய 'நாட்டிய சாஸ்திரத்'தின் கண் திரிபுரதகனம் என்னும் நாடகக் காப்பியங் குறிப்பிட்டிருத்தலாற், பண்டைக் காலத்திருந்த முன்னோர்கள் முதன் முதல் ஆடக்கண்டு களித்தது சிவபிரான் முப்புரங்களை எரித்த கதை தழுவிய தழுவிய நாடகமேயாதல்
6