18
மறைமலையம் 7
―
ய
தெற்றெனப் புலனாகின்றதன்றோ? அக்கதை தழுவிய நாடகம் அத்துணைப் பழையதாய் இருத்தல் பற்றியன்றே பிற்காலத் திருந்த ‘வத்சராஜன்' (கி.பி.1163) என்னும் நாடகப் புலவனும், அப்பெயர்பூண்ட ‘திரிபுரதாகம்' என்னும் நாடகக் காப்பியத் தினை இயற்றுவானாயினனென்பது, என்றிவ்வாறு தமிழர்கள் வணங்கிய தமிழ்த்தெய்வமாகிய சிவபிரானும் அம்மையுமே நாடகத்தை முதன்முதல் ஆக்கினவர் களென்னும் வரலாறு பண்டுதொட்டு வருதல்கொண்டுஞ், சிவபிரான் முப்புரம் எரித்த நிகழ்ச்சியே முதன்முதல் நாடகமாகச் செய்து நடித்துக் காட்டப் பட்டதென்று வடமொழிப் பழநூலாகிய நாட்டிய சாத்திரங் கூறுதல் கொண்டும் பண்டைக்காலத்தில் நாடகநூல் உண்டாயது தமிழ்மக்களுள்ளே தாம் என்று அறிதல்வேண்டும். தமிழில் இயற்றப்பட்ட பழைய நாடக க நூல்கள் இஞ்ஞான்று காணக்கிடையாமை பற்றியும், இக்காலத்து வழங்கும் நாடகக் காப்பியங்க ளெல்லாம் ‘ஆரியம்' 'பிராகிருதம்' அர்த்தமாகதி 'மராட்டி' முதலான வடநாட்டு மொழிகளில் எழுதப் பட்டிருத்தல் பற்றியும் நாடக நூல்கள் வடமொழிக்கே யுரியவை போலுமென்று மலையற்க. ஏனெனின், வடக்கேவந்து குடியேறிய ஆரியர்கள் நடனமுங் கூத்தும் இயற்றத் தெரிந்தவர்கள் அல்லரெனவுங், கதைதழீஇய பண்டையாரியர்க்குள் நடைபெற்ற தென்பதற்கு ஆரியவேத நூல்களுள் யாண்டும் ஏதொருகுறிப்புங் காணப்படவில்லை யெனவும் வடமொழியாராய்ச்சியில் மிகச் சிறந்தவராகிய கீத் (Keith) என்னும் ஆசிரியர் நன்காய்ந்து நன்காய்ந்து முடிவுகட்டி யிருத்தலால்2 நடனமும் நாடகமுங் கூத்து மெல்லாம் முதன் முதற் கண்டறிந்து தமிழாசிரியர்களேயாதல் நன்கு பெறப்படாநிற்கும். இதனாலன்றே தொன்றுதொட்டு இயலும் இசையும் நாடகமுந் தமிழுக்கே உரியவாதல் தெரித்துச் சான்றோரெல்லாந் தமிழை ‘முத்தமிழ்’ என்று வழங்கி வருகின்றார் இவ்வாறே ஆரியத்தைத் ‘த்ரிதம்’ என்னும் அடை கொடுத்து வழங்கல் வடநூல்களுள் யாண்டுங் காணப்படா மையின், அவ்வழக்குத் தமிழுக்கே சிறந்ததாதல் தெளியப்படும் என்பது.
நாடகம்
நூல்கள் எழுதினோர் பண்டைத்
அல்லதூஉம், நாடகத்தை முதற்கட் டோற்றுவித்த இறைவன் அதனைப் பரதமுனிவனுக்குக் கொடுத்து, அதனை