சாகுந்தல நாடக ஆராய்ச்சி
19
அவன் வாயிலாக வழங்க விடுத்தனன் என்று நாட்டிய சாத்திரம் உரை தருதலால், நாடகத்திற்கு முதலாசிரியன் பரதனே யென்பதூஉம் நன்கு பெறப்படுகின்றது. சிவபிரான் தமிழர்கள் வழிபட்டு வந்த முழுமுதற் கடவுளேயாதலும், அவனைத் தீப்பிழம்பொளியில் வைத்து வணங்கித் தீவளர்த்த தமிழ் வகுப்பினர் ‘பரதரே’ யாதலும் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில்' விரிவாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றன. இப்பெற்றியரான தமிழ்ப்பரத வகுப்பினரிற் றோன்றிய பரதமுனிவ னொருவனுக்கே சிவபிரானால் நாடகம் வழங்கப் பட்ட தென்னும் பண்டை வரலாறு, பழைய நாடகக்கலை தமிழ்மக்களுள்ளேதான் தோன்றி நெடுக வழங்கிவரலாயிற் றென்னும் உண்மையினை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விள்ள விளக்குதல் கண்டு கொள்க. அல்லதூஉம், இஞ்ஞான்று வடமொழிக்கண் உள்ள
ட
நாடகங்களின் ஈற்றில் நுவலப்படும் வாழ்த்துரையும்
பரதவாக்கியம்' எனப் பெயர் கூறப்பட்டு வருதலும் இதற்குப் பின்னுமொரு சான்றாய் நிலையும் அதுவேயுமன்றிப், 'பாசன்' என்னும் நாடகப்புலவனைத்தவிர, அவனுக்குப்பின் வந்தோரான ‘சூத்திரகன்’ ‘காளிதாசன்’, 'ஹர்ஷன்', ‘பவபூதி’ முதலான வடமொழி நாடகப் பேராசிரிய ரெல்லாருந் தாம் இயற்றிய நாடகக்காப்பியங்களின் முதலிலும் இடையிலும் ஈற்றிலு மல்லாஞ் சிவபிரானையே வணங்கியும் வழுத்தியுங் குறிப்பிட்டும் இருத்தலும், அப் பெருமானைச் சிறந்தெடுத்து வழிபடுந் தமிழ்ப் பேராசிரியர்களே நாடகம் வல்லாராதலை நன்கறிவுறுத்தும் அடையாளமாமென்க.
இங்ஙனஞ் சிவபிரான் முப்புரங்களை யெரித்த கதை தழீஇப் பண்டுதொட்டு நடித்துக் காட்டப்பட்டு வந்த நாடகங் "கொடுகொட்டி” என்னும் பெயர்த்தாய்த் தமிழ் நாட்டின் கண்ணும் பழமைக்காலத்தே நடிக்கப்பட்டு வந்த தொன்றாம். இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்குமுன் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன் என்னுஞ் சேரவேந்தன், தன்னைப் பழித்த வடநாட்டு அரசர்மேற் படையெடுத்துச் சென்று, அவரை யெல்லாம் போரில் வென்று, சிறைப்படுத்திக் கண்ணகியின் உருவஞ் சமைத்ததற்கு L மயமலைக் கண் ஆய்ந்தெடுத்த கருங்கல்லை அவர் தலைமீதேற்றிக் கொணர்வித்துத், தன்