20
6
―
மறைமலையம் 7*
மாப்பெருந் தேவியோடும் நாடக அரங்கேறி நாளோலக்கம் இருந்த ஞான்று பறையூர்க் கூத்தச்சாக்கையன் என்னும் நாடகம் வல்லான், சிவபிரான் முப்புரமெரித்த கொடுகொட்டி, நாடகத்தையே அவர் முன்னிலையில் நடித்துக்காட்டி அவரை மகிழ்வித்தனனென்று, அப்போது அவரோடு ஒருங்கிருந்து அதனைக் கண்ட ஆசிரியர் இளங்கோவடிகள்.
“ஆங்கவள் தன்னுடன் அணிமணி அரங்கம் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித்
திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவுஞ் செங்கண் ஆயிரந் திருக்குறிப் பருளவுஞ் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம்தயாது சூடகந் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து.”
(சிலப்பதிகாரம், நடுகற்காதை, 65-77)
என்று அருளிச்செய்திருக்குமாற்றாற், கொடுகொட்டி நாடகந் தமிழ்நாட்டின்கண்ணும் ஆடப்பட்டு வந்தமை நன்கறியப்படு
மென்பது.
அங்ஙனமாயினும்,
பண்டைத்தமிழ் மொழிக்கண்
இயற்றப்பட்ட நாடகக்காப்பியங்களும், அக்காப்பிய இலக் கணக்கூறும் நாடகத் தமிழ்நூல்களுஞ் சிலப்பதிகார உரை யாசிரியரான அடியார்க்கு நல்லார் காலத்திலேயே ஐயகோ! இறந்து போயின! அவை வ அங்ஙனம் இறந்துபட்டது எதனாலெனிற் கூறுதும்; இசை நாடகங்களை அருவருப்பாரான பௌத்த சமண்சமயத்தவர்கள் வடநாட்டினின்றும் பெருந் திரளாய்ப் போந்து இத்தமிழ் நாடெங்கணுங் குடி புகுந்து வைகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல், அவர் தங் கோட்பாடுகளிற் சிக்குண்ட தமிழாசிரியர்களும் அவர்போல்