சாகுந்தல நாடக ஆராய்ச்சி
23
தம்மைச் சுருக்கமாக வருவிப்பானல்லது, தானே அவை தம்மைக் கூறப்பெறான், கதைநூலாசிரியனோ தான் வரையுங் கதையுள் வருவாரின் வேறாகத் தன்னைத் தனிநிறுத்தித், தனக்குமுன் செல்வாராக அவரைத் தன்னெதிர் தொடர்புபட நிறுத்தி அவர்தம் இயற்கை செயற்கைகளையும் அவர்தம் வருதல் போதல் வகைகளையும் அவர் இயங்கும் இடத்தினியற்கை காலத்தின் நிலைகளையும் தான் வேண்டுமா றெல்லாம் விரித்தேயாயினுஞ் சுருக்கியே யாயினும் வரையப்பெறுவன். மேலும், ஒரு நாடகக்கதை நிகழ்ச்சியானது ஓர் இரவில் ஒன்பது L மணிக்குத் துவங்கி இரண்டல்லது மூன்றுமணிக்குள் நடத்திக் காட்டுதற்கு இசைந்ததாக இருக்கவேண்டுமாதலால், அது விரிந்து செல்லுதற்கு இடம்பெறாது; அன்றியும். மிக விரிந்த பாரதக் கதை இராமாயணக் கதை கந்தபுராணக் கதை முதலியவற்றை நாடகமாக நடத்திக் காட்டப்புகுவாரும், அவை தம்மைப் மைப் பல பகுதிகளாகப் பிரித்து, அவ் வொவ்வொரு பகுதியையும் ஒவ்வோரிரவில் முடிக்கத்தக்க பற்பல நாடகங்களாக இயற்றி நடத்திக் காட்டக் காண்டுமாகலின், நாடகமென வகுக்கப்படுவ வெல்லாம் ஓரிரவில் நடத்திக் காட்டுதற்கு ஏற்ற சுருங்கிய அளவுடையதாகவே இருத்தல் வேண்டுமென் றுணர்ந்து கொள்க. இவ்வளவு கடந்து இயற்றப்படுவன நாடகமுறையில் இயற்றப்பட்டாலும், அவை ஓரிரவில் ஆடிக் காட்டுதற்கு இசையாமையின் நாடகமாதல் செல்லாதென்க. மற்றுக், கதைநூற்கதைகளோ அங்ஙனம் ஆடிக் காட்டப்படுவன அல்லவாய், எத்தனை நாட்களேனுந் தொடர்ந்து பயிலுதற்கேற்ற அமைப்புடைய வாகலின், அவை ஆசிரியன் வேண்டு மாறெல்லாம் விரிந்து செல்லுதற் கேற்ற பெற்றியவா மென்று கடைப்பிடிக்க
6
இந்
இன்னும், நாடகம் என்பது பரந்துபட்ட நிலவுலகத்தின் ஒரு பகுதியிலோ அன்றிச் சில பகுதியிலோ நடைபெறும் மக்கள் சிலர் பலரின் இயக்கத் தொடர்பை வரை யறைப்பட்ட ஒரு சிறிய இடமாகிய அரங்கின் கண்ணே அழகு மிகுத்து ஆடிக்காட்டுந் திறனுடையது; அத்திறத்தினை நினைந்து பார்க்குங்கால், ஒரு புல்நுனிமேல் நின்ற ஒரு சிறுபனித் திவலையானது தன்னைச் சூழவுள்ள பரிய
இயற்கைப்பொருட் டோற்றங்களைத் தன்னகத் தடக்கிக்