24
―
மறைமலையம் 7
காட்டுந் திறத்தினையே அதற்கு ஒப்பாகச் சொல்லலாம். மற்று, விரிந்த ஒரு கதை நூலோ அங்ஙனமே விரிந்த மக்களியல் கதைநூலோ நிகழ்ச்சிகளைத் தன்கண் நீளக்காட்டுந் தன்மையுடையது அதற்கு மிக அகன்றதோர் அழகிய ஏரிநீர், தனக்குமேல் முழுநிலா வட்டமிட்டு வயங்க அதனைச் சூழ வான்மீன் றொகுதிகள் பொன்றுகளென மிளிரத் தோன்றும் ஒரு பெரு நீல வான்பரப்பைத் தன்கண் விளங்கக் காட்டுதலையே உவமையாகச் சொல்லலாம். இவ்வாறு அவையிரண்டற்கும் உள்ள வேற்றுமை யுணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இனிப், பண்டைநாளில் நாடகங்கள் செய்யுளும் உரையும் ரயும் விரவிய விரவிய நடையில் ஆக்கப்பட்டன. மற்றுக், கதைநூல்களோ செய்யுள்நடை ஒன்றிலேயே இயற்றப்பட்டன. நாடகங்கள் ஏன் அங்ஙனஞ் செய்யுளும் உரையுங் கலந்த நடையில் ஆக்கப் பட்டன வெனின் அவை, உலகத்தில் நிகழும் மக்கள் ஒழுகலாறு களைப் பெரும்பாலும் அங்கு நிகழுமாறே யெடுத்து ஆடிக் காட்ட வல்லாரால் ஓர் அரங்கின்கண் வைத்து நடத்திக் காட்டப்படுந் தன்மையவாதலால், உலகத்திற் கல்வியறிவிலும் ஆற்றலிலும் மிக்க மேன்மக்களின் உரை யாட்டுகளைச் செய்யுள் நடையிலும், அவரல்லாத ஏனை மக்களின் உரையாட்டுகளை அவரவர் உயர்வு தாழ்வுக்கேற்ற உரைநடையிலுமாக இயற்கைக்கு மாறாகாமல் நடத்திக் காட்டினால் மட்டுமே அவற்றை நேரிருந்து காண்பார்க்கு இன்பம் உண்டாம்; ஆகவே, நாடகங்களெல்லாம் இயற்கைநெறி திறம்பாமல் அங்ஙனம் இருவகை நடையும் ஒருங்குவிராய் அமைக்கப்படலாயின. மற்றுக், கதைகளை நுவலுங் காப்பியங்களோ, அரங்கின்கண் வைத்து அவை தம் தம்மை ம நடத்திக் காட்டுவன அல்லவாய், இயற்கை செயற்கைகளை யெடுத்து விரிக்குந் தம் ஆசிரியன்றன் அஃகியகன்ற அறிவின்றிறங்களையே பெரும்பான்மையும் புலப்படுத்துவனவாய்த், தம்மை ஊன்றிப் பயில்வார்க்குச் சொற்சுவை பொருட்சுவைகளைப் பெருகுவிக்கும் பெற்றிய வாகலின், அவைதம் இயலுக்கு ஏற்பச் செய்யுள் நடைவளம் ஒன்றே பொருந்தலாயின வென்க. எனவே, காளிதாசரும் அவர்க்கு முன், பின் னிருந்த நாடக ஆசிரியரு மெல்லாந் தாம் தொடுத்த நாடகக்கதையுள் வருவார் உயர்வு தாழ்வுக்கேற்ற
.
ஆ