பக்கம்:மறைமலையம் 7.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

4. நாடகக் கதையமைப்பு

இனி, இங்ஙனம் அமைக்கப்படும் நாடகம் என்னும் ஓர் அழகிய உடம்புக்கு உயிர்போல்வது, அதனூடு தொடர்ந்து நிகழுங் கதையே யாகும். வல்ல ஓர் உயிர்

இல்லாத வெற்றுடம்பு ஏதொரு பயனும் உடையதாகாமை போலக், கதைச்சுவை நிரம்பாத நாடகமும் பயனுடைய தாகாது னென்றாற், கதைச்சுவை வாயாத நாடகத்தைக் கண்டு ன்புறுவார் உலகில் எவருமே இலராகலினென்பது.

தாக்கும்; கதைச்சுவை யென்பது இன்னதென் றறிந்திலமாகலின், அதனை ஒருசிறிது விளக்கிக் காட்டுக வெனிற், காட்டுதும். "ஓர் அரசிளைஞன், தன் நகரத்திற்குப் புறம்பேயுள்ள கானகத்தில் உலவும் புலி கரடி முள்ளம்பன்றி யானை முதலான மறவிலங்குகள் தன்கீழ் வாழுங் குடிமக்கட்குத் தீங்கு இழையாவாறு, திங்களுக்கு ஒருகால் தன் ஏவலாளர் சிலருடன் படைக்கலந் தாங்கிக் குதிரை யூர்ந்துசென்று, அதன்கண் வேட்டமாடித் திரும்புவான்” என்ற அளவுமட்டும் ஒரு சிறுகதை ஒருவர் சொல்வராயின் அதனைக் கேட்பார் சிறிதும் இன்புறார். மற்று, அதனை அவ்வாறு கூறாது, “அங்ஙனம் வேட்டம் ஆடித் திரும்பும் வழக்கம் உடைய அவ்விளைஞன் ஒருகால் அக் கானகத்தினூடு கொடியதொரு முள்ளம் பன்றியைப் பின்றொடர்ந்து தான் இவர்ந்த குதிரையை விரைந்து செலுத்திச் செல்வுழித், தன்னுடன் போந்த ஏவலாளரைப் பிரிந்து, அதன்பின்னே அக்காட்டினூடு நெடுந்தொலைவு போய்விட்டான். அவன்முற் சென்ற பன்றியோ அவன் கண்களுக்கும் எட்டாமல் அடர்ந்த புதர்களினூடு மறைந்தோடிவிட்டது. அந்நேரம் பகலவன்

வான்

உச்சியில் எறிக்கும் வேனில் நண்பகல், தானுந் தன்குதிரையும் நெடுவழி வந்தமையால் மெய் வியிர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/51&oldid=1577873" இலிருந்து மீள்விக்கப்பட்டது