சாகுந்தல நாடக ஆராய்ச்சி
29
என்று அஃகிய அறிவால் இரண்டடியிற் றிறம்படக் குறித்து அறிவுறுத்தருளினமை கண்டு இறும்பூதெய்துக. எனவே, ஒருவன் அல்லது ஒருத்தியது ஒழுகலாறு ஏதோர் இடை யூற்றானுந் தடைப்படாது சென்று முடியுமாயின் அதனை எடுத்துரைப்பதும் அதனைக் கேட்பதுங் கூறுவார்க்குங் கேட்பார்க்கும் வியப்பினால் நிகழும் இன்பவுணர்வினைப் பயவாமையின் அஃது ஒரு கதையாகத் தொடுக்கற்பால தன்றென்பதூஉம், அவ்வாறன்றி இடையூறுகளால் தாக்குண்டு நன்றாகவோ தீதாகவோ முடியும் ஒருவரது ஒழுகலாறே இருதிறத்தார்க்கும் வியப்பினையும் இன்பவுணர்வினையுந் தந்து கதையாகத் தொடுக்கப்படுதற்குரித்தாமென்பதூஉம் இனிது விளங்கா நிற்குமென்க.
ய
டை
அற்றேல், அங்ஙனம் இடையூறுகளால் தாக்குண்ணும் ஒருவரது ஒழுகலாறு மட்டுமே வியப்பினையும் இன்பத் தினையுந் தருதல் என்னையெனின் ஓர் யாற்று வெள்ளத்தின் விரைவும் விரைவின்மையும் வலிவும் வலிவின்மையும் அதனைக் குறுக்கிட்டு நிற்கும் அணையின் உரங்கொண்டே அறியப் படுதல்போலவும், ஒரு நெருப்பின் வன்மையும் மென்மையும் அதனால் எரிக்கப்படும் ஒரு கானகத்தின் அளவுபற்றியே உணரப்படுதல்போலவும், ஒரு சூறைக்காற்றின் கடுமையுந் தணிவும் அதனால், அலைத்து முறிக்கப்படும் மரங்களின் நிலைபற்றியே அளந்தறியப்படுதல் போலவும் ஒருவருடைய அறிவாற்றல் உடலாற்றலும் மனநலமும் அவையின்மையு மெல்லாம் அவரது ஒழுகலாற்றை வந்து இடைமறிக்கும் இடை யூறுகளின் வன்மை மென்மை வாயிலாகவே நன்களந்தறியப் படுமென்க. அங்ஙனம் வந்து மறிக்கும் இடையூறுகளுக்கும் அஞ்சாது அவற்றை மேற்கடந்து செல்வான்றன் ஆண்மை யினைக் கண்டு வியந்து மகிழ்தலும், மற்று அவ்விடை யூறுகளை எதிர்ந்தும் அவற்றை மேற்கொள மாட்டாது அயர்ந்து மாழ்குவானைக் கண்டு இரங்கி வருந்துதலும், இனி அவை தம்மைக் கண்டு அஞ்சியோடு வானைக் கண்டு இழித்து இகழ்தலும் மக்கள் எல்லார் மாட்டும் இயற்கையாய் நிகழக் காண்டுமன்றே. ஆகவே, அத் தன்மையவாம் இடையூறுகளால் தாக்கப்படாதவன்றன் உரமும் உரமின்யுைம் அறிதற்கு வேறு விழுமிய வாயில் ஒன்றுங் காணப்படாமையின், அப்
னி