30
மறைமலையம் - 7
பெற்றியான்றன் ஒழுகலாறு மக்களெவர்க்கும் விழுமிதாம் ன்பம் பயவாமையும் இயற்கையாய்க் காணப்படுகின்றது. இவ்வாற்றாற், கதை களென்றற்குச் சிறந்தன இடையூற்றின் வாயிலாக ஒருவன்றன் அல்லது ஒருத்திதன் உள்ள நிலையினைப் புலப்படுத்தி, அவ்வாற்றால் அதனைப் பயில்வார்க்குங் காண்பார்க்குங் கேட்பார்க்கும் இன்ப வுணர்வினை எழுப்பும் நீரவா மென்று தெளிந்து கொள்க.
ப
இனி, இச்சாகுந்தல நாகடத்தின்கண் நுவலப்படுங் கதை நிகழ்ச்சியும் இ டையிடையே வந்து குறுக்கிடுந் தடைகளால் அந்நிகழ்ச்சிக்குரியாரின் இயற்கை நிலைகளைப் புலப்படுத்தி அவற்றை யுணர்வார்க்கு அச்சமும் வியப்பும் முடிவறி வேட்கையும் மகிழ்ச்சியும் பயந்து அவரை இன்புறுத்துமாறு ஒருசிறிது காட்டுவாம். துஷியந்தவேந்தன் தேரிலமர்ந்து வில்லுங்கணையும் ஏந்தி ஒரு மானைப் பின்றொடர்ந்த வண்ணமாய் ஒரு கானகத்தினூடு விரைந்து செல்கின் றுழித் துறவோர் சிலர் இடையே புகுந்து அம்மானினைக் கொல்ல லாகாதென்று மறிக்க, அரசனும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அதனைக் கொல்லாது விட்டு விடுகின்றான். இதனால், அரசன் ஓருயிரைக் கொல்ல முனைந்து நின்றவழியும், அறவோர் சொல்லுக்கு அடங்கி அதனை அவ்வாறு செய்யாது விட்ட மனநலன் உடைய னாதல் புலனாகின்றதன்றோ? இன்னும், நடுவே புகுந்த துறவோர், மேல் நடைபெறவேண்டுங் கதை நிகழ்ச்சிக்கும் வழி செய்குநராய் நிற்றலும் அறியற்பாற்று; யாங்ஙனமெனின், அவர்கள் அவ்வரசனைக் கண்ணுவர் ஆசிரமத்திற்குச் சென்று அங்கே சகுந்தலையால் விருந்தேற்கப் படுமாறு ஏவுகின்றமையினென்பது.
ய
இனி, அவ்வாசிரமத்திற்குள் நுழைந்த அவ்வரசன் தனக்குச் சிறிது தொலைவிற் சகுந்தலையும் அவடன் தோழி மாருங் குடங்களில் முகந்த நீரை இளஞ்செடிகளுக்கு விட்டுக் கொண்டு உரையாடி வருதலையும், அவர்கள் அழகில் மிக்கவராய் இருத்தலையுங் கண்டு, அவர்கள்பால் உடனே செல்லுதற்கு மாட்டானாய், மரச்செறிவுகளின் மறைவில் நின்றபடியாய் அவர்களை நோக்கி அவருரையாட்டுகளையுங் கேட்கின்றான். இந்நேரத்தில் ஒரு வண்டு சகுந்தலையின்