பக்கம்:மறைமலையம் 7.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் 7

மறித்தும் அவள்பாற் செல்லுதற்கு வாயிலென்னை யென்று ஆராய்ந்து வருந்திக்கொண்டிருக்கும் அரசன்பால், மீண்டும் அவ்வாசிரமத்திலுள்ள துறவிகள் சிலர்போந்து, கண்ணுவ

முனிவர்

வரும்வரையில் தாம்வேட்கும் வேள்விகட்கு அரக்கரால் இடுக்கண் உண்டாகாதவாறு அவற்றைப் பாதுகாக்கவென்று வேண்ட, அரசனும் அதற்குடனே இயைந்து, மீளத் தான் சகுந்தலைபாற் செல்லுதற்கு அதனையே ஏற்றதொரு வாயிலாகப் பற்றுதல் காண்க. மீண்டும் நேர்ந்த இத்துறவோர் வேண்டுகோள், இடையறுந்த மணிக்கோவைப் பொற் சரட்டினை இணைக்கும் பொன் ஆசுபோல், இடை விட்ட இக்கதை நிகழ்ச்சியினைத் தொடர்பு படுத்துதலின், இஃது இதன் முடிவறியும் முடிவறியும் வேட்கை கிளர்ந்தார்க்குப்

பெருமகிழ்ச்சியினைப் பயத்தல் தேர்ந்துகொள்க.

ன்னுந், துறவோரின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசன் மீண்டுங் கண்ணுவரது பாழிக்கு (ஆசிரமத்திற்கு)ச் செல்லத் துவங்குகையில், அரசன்றன் அன்னை தனது நோன்பு முடிவின்கண் தன்னோடு உடனிருக்குமாறு அரசனைக் “காலந் தாழாது நகருக்கு மீள்க” எனக் கட்டளை விடுத்தமை, பின்னும் அரசற்கோர் இடையூறாய்ப் புகுதல் காண்க. இங்ஙனம் மறித்தும் புகுந்த இடையூற்றை அரசன் தன் நண்பனாகிய விதூஷகனை நகர்க்குப் போக்கு மாற்றல் நீக்கிவிடுதலின், இதுவுங் கதை நிகழ்ச்சியினை மீண்டுந் தொடர்புபடுத்துங் கருவியாய்ப் பயில்வாரை இன்புறுத்துதல் அறிந்துகொள்க.

அதுமேயுமன்றி, இரண்டாம்வகுப்பின் ஈற்றில், இந் நாடக ஆசிரியன் மேல் வருங் கதை நிகழ்ச்சிக்கு ஒருபெருங் காரணமாகத் தந்திருக்குங் குறிப்பும் பெரிதும் வியக்கத்தக்கதா யிருக்கின்றது. மேலே, சகுந்தலையை முற்றும் மறந்துவிட்ட அரசன்பாற், கண்ணுவரால் விடுக்கப்பட்டுச் சென்ற அவள், அவன் தன்னைக் கானகத்தில் க மணந்த வரலாறுகளை யெல்லாம் எத்துணையோ எடுத்துரைத்தும், அவன் அவைகளை நினைவு கூரர்க்கில்லானாய் அவளை வெறுத்து ஒதுக்கிய பிற் சிலநாளிற் கிடைத்த தனது கணையாழியைக் கண்டு, அவளைத் தான் மணந்த வரலாறுகளையெல்லாம் நினைவுகூர்ந்து தன் நேயனாகிய விதூஷகன் அவ்வரலாறுகளைத் தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/57&oldid=1577879" இலிருந்து மீள்விக்கப்பட்டது