பக்கம்:மறைமலையம் 7.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

33

நான்

நினைவூட்ட டாமை என்னை யென்று அவனை வருந்திக் கேட்டலும், அவ்விதூஷகன் “உண்மையில் எனக்கு அத்துறவி மகளிடத்தில் எவ்வகையான விருப்பமும் இல்லை. பகடியாய்ச் சொன்ன சொற்களை உண்மையாக நினையாதே” என்று அரசன் இரண்டாம் வகுப்பின் ஈற்றிலே கானகத்திற் றனக்குச் சொல்லிய சொற்களை எடுத்து மொழிந்தமை காண்க. ஆகவே, மேல்நிகழுங் கதைநிகழ்ச்சி யினை முன்னுணர்ந்து, அதற்குதவியாக அரசன் வாய்மொழியில் வைத்துக் காளிதாசர் இரண்டாம் வகுப்பின் ஈற்றிற் கூறிய சொற்களின் பயன் பெரிதும் நினைவுகூர்ந்து வியக்கற்பாலதா மென்க.

இன்னும், அரசன் சகுந்தலையை மணந்து சிலநாள் வைகிப், பின்னர்த் தன் நகர்க்கு ஏகி, அவளைத் தன்பால் அழைத்துக்கொள்ள விழைந்தவன், அது செய்யாது அவளை முற்றுமே மறந்துபோய் விட்டான். இவ்வளவில் இந்நாடகம் நின்று விடுமாயின், அரசன் அவளை அங்ஙனம் அறவே மறந்துபோயது என்னை யென்றும், அவனால் அங்ஙனங் கைவிடப்பட்ட சகுந்தலையின் வாழ்க்கை பின்னர் எவ்வாறு ஆயிற் றென்றும் அறிய மாட்டாமையிற் பயில்வோர் உள்ளம் அமைதிபெறாது அதனால் இந்நாடகஞ் அதனால் இந்நாடகஞ் சுவைகுன்றிக் குறைபாடு உடையதாகும். ஆகவே, ஆசிரியர் காளிதாசர், சகுந்தலை மாட்டுப் பெருங்காதல் கொண்டவனாகிய அவ்வரசன் அவளை அங்ஙனம் எளிதிலே மறந்துவிடுதல் இயலாமை யுணர்ந்து, அவன் அவளை முற்றும் மறந்து போதற்கு ஒருபெருங்காரணங் கற்பிப்பாராய்த், துருவாசர் சாபத்தை இந்நாடகத்தின் நான்காம் வகுப்பின் துவக்கத் திலேயே வருவித்தல் காண்க. தன் ஆருயிர்க் காதலனையே நினைந்து அவன்வயமாகிய உள்ளத்தினளாய்த், தன்னையுந் தன்னைச்சூழ நிகழும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கேமறந்து, அயர்ந்து தன்குடில் வாயிலில் அமர்ந்திருந்த சகுந்தலை, சடுதியில் விருந்தினராய்ப் போந்த துருவாசரின் வருகையையும் உணராதிருப்பவே, அவர் அவள்மேற் சீற்றங்கொண்டு “நின்மனம் எவன்வயப்பட்டு எவனையே நினைந்து கொண்டிருக்கின்றதோ, அவன் *** நினைவூட்டப் பட்டாலும் நின்னை நினையா தொழிக” என்று வசை (சாபம்) கூறிச் சென்ற ஒரு நிகழ்ச்சிய யினை ஆசிரியர் ஈண்டுப் படைத்து மொழிந்தமையும், இவ்வளவிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/58&oldid=1577880" இலிருந்து மீள்விக்கப்பட்டது