பக்கம்:மறைமலையம் 7.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

35

நிற்கும் நிலையினை நினைந்து கவலையும், உயர்ந்தோர் நிலையிற்றப்பார் என்பதனால் ஆறுதலும், இன்னாமை வந்தக்கால் இறைவனையே துணையாகப் பற்றுதலுந், துருவாசர் வசைமொழியினை யுணர்ந்து அச்சமும், அது தீர்தற்காம் மருந்தினை அறியப்பெறுதலால் மனத்தேர்ச்சியுங், கருக் கொண்டு கணவனால் மறக்கப்பட்ட சகுந்தலையின்பால் இரக்கமும், அவள் தந்தையார் அவளையும் அவள்கூடிய யாழோர் மணத்தையும் மகிழ்ந்தேற்றமை தெரிந்து உவகையுஞ், சகுந்தலையைக் கணவன் இல்லத்திற்கு ஏகுவித்தல் வேண்டி அவ் வாசிரமத்திலுள்ள மகளிர் அவட்கு மங்கள வாழ்த்துச் செய்யும் முறைகண்டு ஒருவகை மகிழ்ச்சியுந் தோழிமாரும் அவள் தந்தையும் அவளைவிட்டுப் பிரியுங்காற் படும் ஆற்றாமையால் மன உருக்கமும், அவள் தந்தையார் அவட்குக் கூறும் அறிவுரையின் வாய்மையால் இலல்றவுணர்ச்சியும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றிநிற்றலுணர்ந்து இன்புறுமாறு ஆசிரியர் இதனை அமைத்த திறம் பெரிது பெரிது

என

தன்பின், தன்பாற்போந்த சகுந்தலை தன் காதன் மனைவியே என்பதனை நினைவுகூராது அவளை அரசன் விலக்கியவுடன் அவள் ஓர் அரம்பை மாதினால் எடுக்கப்பட்டு வான்வழியே மறைந்து போயினாள் மொழியும் அவ்வளவில் இந் நாடகக் கதை முடிக்கப்படுமாயிற், பின்னும் அது பயில்வார்க்கு முடிவறியும் வேட்கையினைத் தணியாமை யிற் குறைபாடு உடைத்தாம். அக்குறைபாடு நீக்குதற்கு ஆறாம் வகுப்பிலிருந்து ஆசிரியர் இக்கதையினை நடாத்துந்திறன் சிறிது காட்டுதும். செம்படவன் ஒருவன் பிடித்த மீன் ஒன்றன் அகட்டிலிருந்து எடுக்கப்பட்ட கணையாழி ஒன்று துஷியந்த பயர் செதுக்கப்பட்டதா யிருத்தல் கண்டு காவலாளர் அதனை அவ்வரசன்பாற் கொணர்ந்து கொடுக்கின்றனர். அரசன் தன் பெயர் பொறிக்கப்பட்டுள்ள அதனைக் காண்டலுந், துருவாசர் இட்ட வசைமொழியின் தீது நீங்கப் பெற்றானாய்த், தன்னால் விலக்கப்பட்ட சகுந்தலையைத் தான் காதன்மணம் பரிந்துகொண்டஞான்று தான் அவளது கைவிரலில் அணிந்த கணையாழியே அத வென்றும், அவள் தன்பால் வருகின்றுழி வழியிலிருந்த ஒரு வாவி நீரில் அவள்தான் அறியாதபடியே அஃது அவள் கையை விட்டு நழுவி

மன்னன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/60&oldid=1577882" இலிருந்து மீள்விக்கப்பட்டது