பக்கம்:மறைமலையம் 7.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

மேற்கொணரலாயினாரென்க.

37

அங்ஙனம் அதனை மேற்கொணருமிடத்தும், ஐந்தாம் வகுப்பின் இறுதியில் துன்பத்தால் ஊடுருவப்பெற்று மகிழ்ச்சியை இழந்தார்க்கு, அதனை மீண்டும் வருவித்து அவருள்ளத்தை ஆற்றுதலன்றோ செயற்பாலதாம் ஈண்டு ஆசிரியனும் அங்ஙனஞ் செய்ததுண்டோவெனின் உண்டு. தான் பிடித்த மீனின் வயிற்றைக் கீண்டக்கால் அதனிலிருந்தெடுத்த அரசனது கணையாழியை விலை செய்யக் கொணர்ந்த செம்படவனை ஊர்காவற்காரரும் அவர்க்குத் தலைவனான கொத்தவாலும் பிடித்துக் கொள்ள, அவனும் அவரும் உரையாடும் பகுதிகள் நகைச்சுவை பயத்தலுடன், அவனைக் கொடுமையாக நடத்தாமற் கொத்தவால் அவன் வாய்மொழி யின் உண்மை கண்டு அவனுக்கு அரசனிடமிருந்து பரிசு வாங்கிக் கொடுத்து, அவனுடன் கேண்மை பாராட்டிச் செல்லும் பகுதியும் முதற்கட்டோன்றிய நகைச்சுவையினைச் சிதையாதாய்ப் பயில்வாருடன் எல்லாரையும் மகிழவைத்தல் காண்க.நான்காம் வகுப்பிலிருந்து உள்ளங்குழையுந் துன்பத்தின் பக்கமாய்த் திரும்பி, ஐந்தாம் வகுப்பின் ஈற்றிற் பெருகி நிரம்பிய துயர்க்கடலுட் போந்து விழுந்த இந்நாடகக்கதை நிகழ்ச்சியை ஆறாம்வகுப்பின் துவக்கத்திலேயே அதன்கண்ணிருந்தும் எடுத்து நகையும் மகிழ்வும் மேன்மேன்மிகுமாறு அதற்கு மீண்டும் உயிர்ப்பேற்றிக் கொண்டுசென்று, ஏழாம் வகுப்பின்கண் ஆசிரியன் அதனை இனிது முடிக்கும் அரிய பெரிய புலமைத்திறங் கண்டு இன்புறுக.

னி, இந்நாடகக் கதைநிகழ்ச்சிக்கு ஓர் அச்சாணி போல் டைப்புகுந்து நின்ற துருவாசர் வசைமொழிக்கு ஒருமீனை அடையாளமாக நிறுத்தியுஞ், சகுந்தலை துஷியந்தனை இடை நின்று பிணிக்குங் காதல் அன்பிற்கு ஒரு கணையாழியை அடையாளமாக நிறுத்தியுங், காதலராவார் தம்மை ஒருங்கு பிணிப்பித்த இறைவன் திருவருட்டுணையினை நாடாது தாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்த நிலைமையினையே நினைந்து துயர்கூர்ந்து நின்றால் அவரது உள்ளந்திட்பம் இன்றி நீர்போல் நெகிழ்ந்த பதத்ததாயிருத்தலின் அத்தகைய வுள்ளத்தையே பிறரிட்ட வசைமொழி பற்றியிருக்கும் என்பதற்கு அம்மீன்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/62&oldid=1577884" இலிருந்து மீள்விக்கப்பட்டது