40
மறைமலையம் 7
―
ஏம் கூட
L
அவ்வழியிற் றனக்கெதிரே பொன்னொளி துலங்கத் தோன்றிய ம் என்னும் மலை காசியப முனிவர் தம் மனைவியொடு தவம் புரியும் பெருமைவாய்ந்த தென்பது மாதலி சொல்லக் கேட்டு, அம் முனிவரை வணங்குதற்கு விழைந்து அம்மலைக் கண் இழிந்து அங்குள்ள தவப்பள்ளிக்குச் செல்கையில் இடையே விளையாடிக் கொண்டிருந்த ‘சர்வதமனன் என்னுஞ் சிறுவன் சகுந்தலைக்குந் தனக்கும் பிறந்த மகனே யென்ப துணர்ந்து, பின்னர் அங்குள்ள முனிவர் மகளிரால் தன்கணவன் வந்தசெய்தியறிந்து தனக்கெதிரே வ வந்த சகுந்தலையைக் கண்டு ஆற்றாமை மிக்கு வருந்த, அங்ஙனமே சகுந்தலையும் நெஞ்சம் நெக்குருகிக் கண்ணீர் சிந்தப், பின்னர்த் தானும் அவளும் புதல்வனும் மாதலி அழைப்பச் சென்று காசியபரையும் அவர்தம் மனைவியாரையும் வணங்கி அவர் தம் அருள்பெற்று, வானவூர்தியில் மீண்டும் ஏறித், தனது நகர்க்குப் போந்து இனிது வாழ்ந்தனன் என ஆசிரியர் இந்நாடகக் கதையினை முற்றுந் தொடர்புபடுத்தி முடித்துப், பயில்வாரது உள்ளத்தின் வேட்கையைத் தணிவுசெய்து, அவரை மிக மகிழச் செய்த திறன் கண்டு வியந்திடுக.
ஒரு
இவ்வேழாம் வகுப்பின்கண் ஆசிரியர் வியப்பும் மகிழ்ச்சியும் ஆற்றாமையும் அமைதியும் அடுத்தடுத்துத் தோன்றுமாறு கதை நிகழ்ச்சியினைத் திருப்பித் திருப்பிச் செலுத்துஞ் செய்கைத் திறனை என்னென்பேம்! காசியபரது தவப்பள்ளியின் அருகே அரசன் சிறிது அமர்ந்திருக்கையிற், சடுதியில் ஒருசிறான் சிங்கக் குட்டியை இழுத்த வண்ணமாய் முனிவர் மகளிர் இருவருடன் வருதலும், அரசன் அவனைக் காண்டலும் அவன்மீது விழைவு மிக்கு முளை யிலேயே அவனிடத்துக் காணப்படும் ஆண்மையினை வியந்து அவன் பிறப்பினை ஆராய்தலும், அங்ஙனம் ஆராய்கையில் அவன் துஷியந்தனுக்குஞ் சகுந்தலைக்கும் பிறந்தமகன் என்பதை அம்முனிவர் மகளிர் அவனோடு உரையாடுஞ் சொற்களி லிருந்தும், அரசன் அச்சிறுவனது கையினின்றுங் கழன்று கீழ்விழுந்த காண்டகத்தைத் தான் தன் கையிலெடுத்தும் அதனால் அவன் ஊறுபடாதிருத்தல் கொண்டு, அம்மகளிர் இறும்பூதுற்று உரைத்த உரைகளிலிருந்தும் அச்சிறான் தன்