இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சாகுந்தல நாடக ஆராய்ச்சி
41
மகனே என்று துணிதலும், இந்நிகழ்ச்சியெல்லாம் அம் மகளிரால் அறிந்து போந்த சகுந்தலையும் அரசனும் ஒருவரை யொருவர் நோக்கி ஆற்றாமையுறுதலும் பிறவும் எத்துணை நுட்பமாக எத்துணை அழகாக எத்துணை இனிமையாக ஆசிரியனால் இடையே தொடுத்தமைக்கப்பட் டிருக்கின்றன! இங்ஙனம் நாடகக் காப்பியம் அமைத்தலிற் காளிதாசரன்றிப் பிறர் எவர் வல்லார்! என்க.