பக்கம்:மறைமலையம் 7.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

5. நாடகமாந்தர் இயற்கை

இனி, ஒரு நாடகக் கதை நிகழ்ச்சியில் தலைவன் தலைவியராயும், அவர்க்கு நண்பர் பகைவர் நொதுமலராயுந் தொடர்புபட்டு நிற்பார் இல்வழி, அந்நாடகமுந் தொடர்ந்த கதை நிகழ்ச்சி இல்லதாய் முடியும் அஃதில்லையாகவே அஃதொரு நாடகமாதலும் இல்லையாம். ஆகவே, ஒரு நாடகத்திற்குத் தலைவன் தலைவியரும் அவரொடு தொடர் புடையாரும் இன்றியமையாது வேண்டப்படுவ ரென்பது.

அங்ஙனம் நாடகத் தலைமக்களும் பிறரும் அதற்கு முதன்மையாய் நிற்பினும், அவருடைய மன இயற்கையும் ஒழுகலாறுமே அதன் கதைநிகழ்ச்சிக்கு அடுத்த நிலையில் முதன்மையுடையவாய்த் தோன்றுகின்றன. ஏனைப் பொது மக்கள் எல்லாரிடத்துங் காணப்படும் பொதுவியற்கையும் பொதுநிகழ்ச்சியுமே தலைமக்களாக எடுக்கப்பட்டாரிடத்துங் காணப்படுமாயின், அவர் மற்றை எல்லாரையும் போல் L மணந்துகொண்டு நடாத்தும் ல்வாழ்க்கை அதனைக் காண்பார்க்குங் கேட்பார்க்கும் ஏதொரு சுவையும் பயவாது பயவாதாகவே, அஃதொரு நாடகக்கதையாகத் தொடுக்கப் படுதற்கும் ஏற்றதாகாது. ஆதலால், நாடகக் கதைநிகழ்ச்சிக் குரியராகத் தெரிந்தெடுக்கப்படுந் தலைமக்களும் பிறருமாகிய மாந்தர் ஏனைப் பொதுமக்களிடைக் காணப்படாத தனிப்பட்ட இயற்கையுந் தனிப்பட்ட ஒழுகலாறும் உடையராக இருத்தல் இன்றியமையாததாகும். அவ்வாறு அவர் ஒவ்வொருவருர்க்குந் தனிச் சிறப்பாக உள்ள இயற்கைக்கு இசையவே அவரவர் ஒழுகலாறும் நடைபெறாநிற்கும். இவ்வொழுகலாறுகள் ஒன்றோடோன்று வந்து பிணையுங்கால், ஒன்றையொன்று தழுவியும், ஒன்று மற்றொன்றை எதிர்ந்து விலக்கியுஞ் செல்லுமாற்றாற் சுவைமிகவுடையவாய்த் தொடர்ந்துபோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/67&oldid=1577889" இலிருந்து மீள்விக்கப்பட்டது