பக்கம்:மறைமலையம் 7.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ங்

மறைமலையம் 7

அவரது மனவியற்கையினை ஆழ்ந்து ஆய்ந்து காணமாட்டாப் புல்லறிவினார்க்கு, நல்லாரைத் தீயாராகவுந் தீயாரை நல்லாராகவுங் கருதிவிடும் பிழைபாட்டுணர்ச்சி உண்டா மாயினும், உயிரினியல்புகளை உள்ளவாறு ஆராய்ந்து அளந்து காணும் நுண்ணறிவினார்க்கு அப்பெற்றித்தாகிய பிழை பாட்டுணர்ச்சி உண்டாகாதென்க, இங்ஙனம் நல்லாரைத் தீயாராகவுந் தீயாரை நல்லாராகவும், நல்லதைத் தீயதாகவுந் தீயதை நல்லதாகவுங் கருதிவிடும் பிழைபாட்டுணர்ச்சி பொதுமக்கள் பால் மிகுந்து காணப்படுதல் கண்டன்றே, நல்லிசைப் புலவர்களான இளங்கோவடிகள், காளிதாசர் முதலான ஆசிரியர் நுண்மாண் நுழைபுலம்மிக்க சிலப்பதிகாரம், சாகுந்தலம் அனைய காப்பிய நூல்களும் நாடக நூல்களும் இயற்றி, அவை வாயிலாக மக்களிற் சிறந்தார் இழிந்தார் தம் மனவியற்கைகளின் உயர்பு இழிபுகளை உள்ளவாறு புலப்படுத்தி, அவ்வாற்றால் அப்பிழை பாட்டுணர்ச்சியினைத் தொலைக்குஞ் செந்நெறி காட்டிப் பேதையுலகினைத் தெருட்டு வாராயின ரென்க.

ரு

இனி, நாடகமாந்தரின் இயற்கை அவரவர் சொற் செயற் றொடர்புகளாற் புலனாகாமல் இரா. நல்லார் தமது நல்லியற்கை புறத்தார்க்குப் புலனாகாமல் ஒரோவொரு காரணம்பற்றிச் சிலகால் அதனை மறைத்துவைத்து ஒழுகுவாராயினும், பால்லார் பிறரை ஏமாற்றுதற் பொருட்டுத் தமதியற்கை வெளியார்க்கு விள்ளாதவாறு அங்ஙனமே வைத்துக் கரந் தொழுகுவாராயினும், இரு திறத்தார் இயற்கைகளுமே அங்ஙனம் எக்காலுந் தொடர்பாக L மறைத்து வைக்கப்படுதற்கு அடங்கிக் கிட வா. அவர் அறியாமலே அவரதுண்மை யியற்கை அவருடைய சொற் ய செயல்களின் வாயிலாய் இடையிடையே புலனாய்விடும். ஆகவே, ஒருவன் அல்லது ஒருத்தியின் முழுமன நிலையை அவர் ஒரோ வொருகால் நிகழ்த்துஞ் சொற் செயல்களிலிருந்து அறிந்துகோடல் ஒரு சிறிதும் ஏலாது. தொடர்பாக அவர்தம் ஒழுகலாறுகளை நுனித்தறிந்து அளந்து காணவல்லார்க்கே, அவ்வம் மாந்தர்தம் உண்மை மனவியற்கை விளங்காநிற்கும். மக்களின் உலக வாழ்க்கையில் ஊடுருவி நுழைந்து அவரவர் மன வியற்கைகளையும் அவற்றால் விளையும் நன்மை தீமைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/69&oldid=1577900" இலிருந்து மீள்விக்கப்பட்டது