பக்கம்:மறைமலையம் 7.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

45

உண்மையான் உணர்ந்து காண்பார் மிக அரியர். ஒரோ வொருகால் ஒரோவொருவர் மாட்டுக் காணப்படுஞ்

சொற்செயல் நிகழ்ச்சியிலிருந்து அவரது மனநிலையைப் பிழைபடத்துணிந்து நடப்பாரே இம் மண்ணுலகில் மிகப் பலராய் இருக்கின்றனர். இவ் வியல்பிற்றாகிய பாட்டுணர்ச்சியினாலேயே

பிழை

இவ்வுலகில் அளவுபடா அல்லல்கள் நாடோறுங் கிளைத்து ஆறறிவுடைய உயர்ந்த மக்கள் வாழ்க்கையினைப் பாழ்படுத்துகின்றன. தொடர்பாக ஒருவரது ஒழுகலாற்றினை ஆழ்ந்து ஆராய்ந்து பாராதார் அவரது மனநிலையினை யாங்ஙனங் காண மாட்டுவார்? மகிழ்ந்து கிளர்ந்திருக்குங்கால் ஒருவனை வைத்துப் பிடித்த நிழலுரு ஓவியமும், அவனே துயருற்று வாடி வதங்கி யிருக்குங்கால் அவனை வைத்துப்பிடித்த ஓவியமும், அவனே ஆழ்ந்த கருத்தினனாய் ஆன்றோர்தம் அறிவுரைகளை ஆராய்ந்து அமைதியாயிருக்குங்கால் அவனை வைத்தெடுத்த ஓவியமும், அவனே நோயுற்று நொந்து மெலிந்திருக்குங்கால் அவனை வைத்துப்பிடித்த ஓவியமும், அவனே பசித்தும் விடாய் கொண்டும் உணவினை அவாவியிருக்குங்கால் எடுத்த வியமும், ன்னும் இங்ஙனமே அவன் ஓரொருகால் ரொருவகையாய் இருந்தக்கால் எல்லாம் வைத்துப் பிடித்த பல்வேறு ஓவியங்களுந் தனித்தனியே அவனது வடிவின் முழுத்தன்மையினையுங் காட்டுமோ? காட்டாவன்றே, மற்றுத், தனித்தனியே அவன துருவ இயல்பினை முற்றுங் காட்டாத அவ்வோவியங்களை யெல்லாம் ஒருங்கு தொகுத்து, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை நன்களந்து காணவல்ல நுண்மாண் நுழைபுலமுடையார்க்கே அவனதுருவத்தின் முழுவியற்கையும் இனிது விளங்கா நிற்கும். இதுபோலவே. மக்கள் ஓரொருகால் நிகழ்த்துஞ் சொற் செயல்களிலிருந்து அவரது மனவியற்கை யினையுந் தெளிந்துகோடல் இயலாதென்றும். அவரது வாழ்க்கையிற் றொடர்பாக நடைபெறுஞ் சொற்செயல் நிகழ்ச்சிகளைப் புடைபட வைத்தளந்து நுணுகிக் காண வல்லார்க்கே அவரது முழு மன வியற்கையும் விளங்கித் தோன்றுமென்றும் உணர்ந்துகொள்க.

முழு

னி, இம்மண்ணுலகத்து வாழ்வாரில் விலங்குகளை ஒப்பவும் ஒரேவகையாய் இயங்கும் பொறிகளை (இயந்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/70&oldid=1577908" இலிருந்து மீள்விக்கப்பட்டது