பக்கம்:மறைமலையம் 7.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

உடை

மறைமலையம் 7

யினையும் ஒப்பிட்டுப் பார்மின்கள்! சிற்றெறும்பு தான் வேண்டியவாறெல்லாம் இயங்குதலையுந், தான் செல்லும் வழியில் ஏதேனும் வந்து குறுக்கிட்டால் அதன்மேல் ஏறியோ அல்லது அதனைச் சுற்றியோ அல்லது தான் வந்தவழியே திரும்பியோ ஏகுவதன்றி வாளா நில்லாமையையும் உற்று நோக்குக! மற்றுக், கோலியுருண் டையோஒரு சிறுவனால் உருட்டப்பட்டவழி உருண்டு ஓடுதலும், இடையே ஒரு பெருங்கல்லாற் றடுக்கப்ப்டடவழி ஓடாது நின்றுவிடுதலும் ஓ நோக்குக! இவ்விரண்டன் இயல்பு களையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், உயிருள்ள பொருள்கள் எல்லாம் அறிவும் யனவாயிருத்தலால் அவைதாம் விரும்புமாறெல்லாம் யங்க வல்லனவா மென்பதூஉம், ஏனை உயிரில் பொருள்களோ அறிவில்லாதனவா யிருத்தலால் அவை அங்ஙனம் இயங்கமாட்டாதனவா மென்பதூஉம் நன்கு புரிந்து விளங்காநிற்கும். உயிரில் பொருள்களின் இயற்கை நாடோறும் இப்படியே யிருக்குமென்றும், பிறி தொன்றால் அதன் இயக்கம் மறிக்கப்பட்ட வழி அஃதிவ்வாறு இருக்குமென்றும் நாம் உறுதியாய்ச் சொல்லலாம். காந்தக்கல் இருப்பூசியைத் தலைப்பட்டால் அதனைத் தன்மாட்டு ஈர்த்துக்கொள்ளு மென்றும், அதற்கும் அவ்விருப்பூசிக்கும் இடையே ஒரு கல்லாயினுங் கட்டையாயினும் வைக்கப் பட்டால் அஃது அதனைத் தன் மாட்டு இழாமற் கிடக்கு மேயல்லால் அதனை வேறுவழியாய் இழுக்க அறியாதென்றும் நாம் திட்டமாய்ச் சொல்லலாமன்றோ? மற்று, ஓர் எறும்பு அங்ஙனமே ஒரு தடையால் மறிக்கப் பட்டவழி, அஃது அதன் மேல் ஏறிச் செல்லுமோ, அல்லததனைச் சுற்றிச் செல்லுமோ, அல்லது தான் வந்தவழியே திரும்பிச் செல்லுமோ என்பதனை அஃது இயங்கத் துவங்கியபின் அல்லாமல் முன்னே சொல் லுதல் எவர்க்கேனும் ஏலுமோ? ஏலாதன்றே. சிற்றுயிர்களின் இயக்கத்தையே முன்னறிந்து சொல்லுதல் இயலாதபோது, ஆறறிவிற் சிறந்த மக்களின் இயக்கங்களை அளந்து அவர்தம் இயற்கைகளை உறுதிப்படுத்திக் கூறுதல் எல்லார்க்கும் எளிதில் வாய்க்குமோ! என்றாலும், இம்மண்ணுலகில் அத்திபூத்தாற் போல் அருமையாய்த் தோன்றி அறிவாற்றலில் மிக்கு விளங்கும் நல்லிசைப் புலவர் ஒருசிலரே, பல்வேறு வகைப்பட்ட மக்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/73&oldid=1577933" இலிருந்து மீள்விக்கப்பட்டது