52
மறைமலையம் - 7
னி
பொன்னொளி திகழும் மடமான் வயிற்றில் மின்னொளி துலங்கும் பெடைமான் கன்றன்றிப் பிறிதொன்று பிறக்குமோ நீலமும் பசுமையுஞ் சாலக்கலந்த கோலக்கலாவ மயிலுக்கு ஆலுந்தோகை அழகிய மயிலல்லது ஏலப்பிறப்ப தினி வேறுண்டோ! இருந்தவாற்றால் மாதரின் எழில் நலங்களை யெல்லாம் ஒருங்கு கூட்டித் திரட்டிச் சகுந்தலையின் வடிவழகை இறைவன் படைத்தனனென்றே அறிதல்வேண்டும். ஆசிரியர் காளிதாசர் இவளது உருவழகினைப் பிறருரைகளிலிருந்து ஆங்காங்குப் புலப்படுத்தி யிருக்குங் கூறுகளையெல்லாம் ஈண்டு ஒருங்குதொகுத்துக் காண்குவமாயின், அஃது அவள் வடிவினை வரைந்த ஓவியம்போல் நமது அகக்கண் எதிரே விளங்காநிற்கும்.
முதன் முதல் அவளை நம்முன் கொணர்கையிலேயே “புதிது அவிழ்ந்த மல்லிகைமலர்போல்" அவள் மெல்லி யளாயிருக்கும் பொதுத் தோற்றங் குறித்துரைக்கப் பட்டமை (10 ஆம் பக்கம்) காண்மின்! முறுக்குடைந்து புதிதாக மலரும் மல்லிகை மலர் நறுமணம் பரப்பி எத்துணை மெல்லிய வண்மைநிறம் உடையதாய்ப் பொலிகின்றது! அங்ஙனமே இவளது மேனி வெண்மைநிறந் தோற்றிக் கட்டிளமையழகிற் கனிந்து விளங்குவதுடன். மென்மைத்தன்மை காட்டி இவள் செல்லுமிடனெல்லாந் தூயமணம் வீசியுந் துலங்காநிற்கிறது! இங்ஙனங் காணப்படும் இவளது மேனியின் வனப்புச் "செயற்கை யாலன்றி இயற்கையழகு நலங்கனிந்த” தொன் றென்பது (10) இவளைக் கண்டு வியந்த துஷியந்த மன்னன் வாயுரையாற் புலனாகவைத்த ஆசிரியனது அறிவின் நுட்பம் மிக வியக்கற்பாலது. மேலே, புதிது அவிழ்ந்த மல்லிகை மலருக்குச் சகுந்தலையின் மேனியை ஒப்பிட்டவள் அவள் தோழியர் இருவரில் அனசூயை என்பவளே யாவள், இத்தோழியோ துறவிகளுடன் கானகவாழ்க்கையில் இருப்பவள், இயற்கைக் காட்சிகளையும், ஆண் பெண் பாலாரின் இயற்கைத் தோற்றங்களையுமன்றி, நகர வாழ்க்கை யிலுள்ள செயற்கைக் காட்சிகளையும் அங்குறையும் மாதர் ஆடவரின் செயற்கைத் தோற்றங்களையுங் கண்ட வளல்லள். ஆகவே, அவள் தான் உறையும் அக்கானக உறையுளில் நாடே ஈறுங் கண்டுமகிழும் மல்லிகைப் பூவின் இயற்கை யழகையே சகுந்தலையின் இயற்கையழகின் மெல்லிய தூய