54
மறைமலையம் - 7
சகுந்தலை, உயர்ந்த பட்டாடைகளை யுடுத்தித் திகழும் நகரத்துச் செல்வமங்கையரைப்போலாது, மர நாரினால் நெய்த மரவுரியாடையினையே யணிந்திருந்தாலுஞ், சடைப்பாசி யினாற் சூழப்பட்டு நடுவே அலர்ந்திருக்கும் தூய வெண்டாமரை போலவுங், களங்கம் உடையதாயிருந்தும் ஒளிவிளக்கம் வாய்ந்து திகழும் வெண்டிங்கள் போலவும் விளங்குகின்றாள் என்பதும் அரசன்வாயுரையாற் புலனா கின்றது.
இன்னும், அவளது உடம்பின் நீண்டுதுவளும் மெல்லிய அமைப்பு ஓர் இளம்பூங்கொடியின் அமைப்பை ஒத்திருத்தல், அவடன்தோழி பிரியம்வதை கூறும் உரையால் அறியக் கிடக்கின்றது (12).
பின்னுஞ், சகுந்தலையின் கூந்தல் கரியவாய் நீண்டிருத்தலும் (22); இவடன் புருவங்கள் பிறைவடிவினவா யிருத்தலும், விழிகள் பெரியனவாய் மடமானெனப் பிறழ்தலும் (48-87, 27); கன்னங்கள் தாமரையிதழ்போல் வெண்மையிற் செம்மைநிறம் விரவித் தெளிந்து திகழ்தலும் (45); கீழ் இதழ் இளந்தளிர்போற் சிவந்து தோன்றுதலும், தோள்கள் மென்கொம்புபோல் மென்மை வாய்ந்திருத்தலும் (11-12); கொங்கைகள் பருத்துப் புடைத்துக் காணப்படுதலும் (10); இடுப்புச் சிறுகிப் பிட்டங்கள் பெருத்திருத்தலும் (45, 42); தொடைகள் இளவாழை மரம்போல் அடியிற் பருத்து வரவரச்சிறுகி வழு வழுப்பாய்ப் பொலிதலும், அடிகளிரண்டின் சேர்க்கை மலர்ந்த செந்தாரைப்பூவென வடிவும் வண்ணமும் மென்மையும் வாய்ந்து விளங்குதலும் (51) ஆசிரியன் இந்நூலின் இடை யிடையே அரசன் உரையாட்டுக் களிலிருந்துஞ், சகுந்தலை தன் றோழிமா ருரைகளிலிருந்தும் புலப்பட வைத்திருத்தல் காண்க. கருதற்பாலதுளது; பிற்றைஞான்று செய்யுள் நூல்கள் ஆக்குவான் புகுந்த வடமொழி தமிழ் மொழிப் புலவர்கள் ஒரு நங்கையின் அழகிய தோற்றத்தை எடுத்துரைக்குங்காலெல்லாம், அவடன் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரையிலுள்ள உறுப்புக்களைத் தமக்குத் தோன்றியவாறெல்லாம் பலப்பலவகையாய்ப் புனைந்து மீக்கூறிப் பற்பல செய்யுட்கள் இயற்றித் தந்திறமையைக் காட்டுதலில் முனைந்து நிற்கின்றார். இவ்வாறு புனைந்துரைப்
இங்கொன்று
ய