பக்கம்:மறைமலையம் 7.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

மறைமலைய மாண்பு

நுழைவுரை

தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்!

முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், 'முத்தமிழ் அடிகள்’ என முழக்கமிட நின்றார்!

ருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார்.

"தமிழ் தனித்து இயங்காது” என்றும், வடமொழி வழியது என்றும், “வடமொழித் துணையின்றி இயங்காது” என்றும், “உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே” என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க,

66

வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே” என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர்.

சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், 'தனித்தமிழ்' (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் ‘தனித்தமிழ்' என்பதை நிலை நாட்டிய நிறைமலை,

மறைமலையடிகளாரே!

சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், 'தொல் காப்பியக் கடல்' எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/8&oldid=1577830" இலிருந்து மீள்விக்கப்பட்டது