பக்கம்:மறைமலையம் 7.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் - 7

இன்னாரை இன்னரென்று குறிப்பிட்டறியும் அறிவு எல்லார் மாட்டும் நிகழக் காண்டலால், அத்துணை முதன்மையான மேனி நிறத்தைப் பகுத்தறிந்து விளங்கக் காட்டமாட்டா ஒருவன் நல்லிசைப் புலவனாதல் யாங்ஙனமோ வென்பது தமிழில் ராமாயணம்' பாடிய கம்பன் சீதையின் மேனி நிறத்தை அவள் கணவன் இராமன் வாயிலாகப் புலப்படுத்துகின்றுழி, “என்னிறம் உரைக்கேன்! மாவின் இளநிறம் முதிரும் மற்றைப் பொன்னிறங் கறுக்கும் என்றால் மணிநிறம் உவமை போதா மின்னிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒளிக்கும் வேண்டின் தன்னிறந் தானே ஒக்கும் மலர்நிறஞ் சமழ்க்கு மன்றே!”

என்று கூறிய செய்யுள் (கிட்கிந்தா காண்டம், நாடுவிட்ட படலம், 65) சீதையின் மேனிநிறம் இன்னதென்று குறித்துக் கூறாதாய்ப் பெரியதொரு குழப்பஞ்செய்தல் காண்க. சகுந்தலையைப் போலவே சீதையும் வடநாட்டுப் பெண் வடநாட்டுப் பெண்மக்கட்குரிய பொதுநிறமாகிய வெண்மை யை மட்டுங் கூறினாலும், ஒருவாறு அவளது வடிவத்தை நம் அகக்கண் எதிரே 6 காண்டல்கூடும். அவ்வளவுதானுங் கூறகில்லாது, தென்னாட்டு மாதரின் மாந்துளிர் நிறத்தை முதலிலும், பொன்னிறத்தை அதன் பின்னும், மணியின் நிறத்தை (ஒன்பது மணிகளும் வெவ்வேறு நிறத்தனவாதலால் அவற்றுள் இன்னமணியின் நிறம் என்று குறியாமையும் ஒரு பெருங்குறைபாடு) அதன் பின்னும், மின்னலின் நிறத்தை அதன் பின்னுமாக வைத்துக் குழப்பிச், சீதையின் மேனி நிறம் ன்னதெனக் காட்டும் இயற்கை நுண்ணுணர்வின்றிப்போயது

உள்ளங்காலிலிருந்து

நல்லிசைப் புலமையாமோ? கூறுமின்! இங்ஙனமே, உச்சந்தலை வரையிற் சீதையின் உருவழகை இராமன் தன் தூதுவனாகிய அனுமானுக்கு விரித்துக் கூறுவதாக வைத்துக் கம்பன் வாளா பாடியிருக்குஞ் செய்யுட்கள் முப்பத்து நான்கிலும் இயற்கைக்கு மாறாகக் காணப்படும் பிழைபாடுகள் மிகப் பல. அவை யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிகவிரியும். இயற்கையை ஆராயும் நுண்ணுணர்வால் அவையெல்லாங் கண்டுகொள்க.

மேலும், நல்லிசைப் புலவனாவான் ஒருவன் ஒரு தோற்றத்தைப் புனைந்துரைக்கின்றுழி, அதனை அணுவணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/81&oldid=1578000" இலிருந்து மீள்விக்கப்பட்டது