பக்கம்:மறைமலையம் 7.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

-7

மறைமலையம் - 7

அதனை இனிது விளங்க வைத்திருக்கின்றார். “அவளது முகம் நீண்ட விழிகளையுடையதாய் மழைக்கால மதியின் ஒளிவாய்ந்து திகழ்கின்றது; அவளுடைய இரண்டு கைகளுந் தோளின்கண் மெல்லெனச் சரிந்து காணப்படுகின்றன; அவடன் கொங்கைகள் ஒன்றையொன்று நெருங்கித் தொடுதலுடன் உயர்ந்து தோன்று கின்றன; அவளுடைய விலாப்பக்கங்கள் இழைத்துச் செய்தன போற் பொலிகின்றன; அவளது இடை ஒரு கைப்பிடியுள் அடங்குவதாய் உளது; அவளிடுப்பின் கீழ்ப்பகுதிகளோ அகன்றிருக்கின்றன. அவளடி விரல்கள் சிறிதே வளைந்திருக் கின்றன; இந்தவாற்றால், ஆடல் ஆசிரியன் ஆடுவாளுருவம் எவ்வளவு விழுமியதாய் இருக்கவேண்டு மெனத் தன் உளத்தின்கண் எண்ணினானோ அவ்வளவு விழுமிதாகவே இவளது வடிவம் உருவாக்கப் பட்டிருக்கின்றது!” என்று அக்கிநிமித்திரன் என்பான் மாளவிகையின் எழில்வடிவை வியந்து கூறும் முகத்தால், ஆசிரியன் அதனை நம் அகக் கண்ணெதிரே நன்கு புலனாமாறு காட்டுதல் காண்க.

ஓரழகிய

இங்ஙனமாக எள்ளளவும் பழுதில்லா யாக்கையின்கண் உறையும் ஓருயிர் இனிய இயற்கை வாய்ந்ததா யிருக்குமே யல்லாது இன்னா இயற்கை யுடையதா யிருக்குமோ? சகுந்தலை புறத்தே அழகுமிக்கவளாய் இருந்தது போலவே அகத்தேயும் அழகுமிக்க குணங்கள் அமைந்த வளாய்க் காணப்படுகின்றாள். இவள்

மிக

மெல்லிய உடம்புடையவளாய் இருந்துந் தன்னுடம் பின் வருத்தத்தையும் பாராமற் பூஞ்செடிகளி னிடத்தும் மிக்க அன்புடையவளாய், அவை வாடாமற் செழித்திருக்கும் பொருட்டுத் தானுந் தன் தோழிமாருடன் குடங்களில் முகந்த நீரை அவற்றிற்கு விடுவள். இன்னும், அவ்வாசிரமத்தில் உறையும் மான்களையுந் தன்மகவுபோற் கருதி அத்துணை யன்புடன் வளர்த்துவந்தவள் (72), இவ்வாறு ஓரறிவுயிர்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்க ளிடத்தும் அளவில்லா அன்புடையவளாய் ஒழுகிய அவள், ஆறறிவுடைய மக்கள்பால் எத்துணைப் பேரன்பு பூண்டு 1 ஒழுகுவள்! இதனால் அவளுயிர் அன்பென்னுந் தேனமிழ்து நிரம்பித் ததும்புந் தூய ஒரு பொற்குடமென்றே அறியற் பாற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/87&oldid=1578051" இலிருந்து மீள்விக்கப்பட்டது