பக்கம்:மறைமலையம் 7.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

63

இத்துணை அன்பும் அதனால் மென்றன்மையும் ஒருங்கு கழுமிய உள்ளத்தினளாய் இருத்தலினாலேயே அன்புக்கு மாறான சிறியதொரு வன்செய்கையைச் சிற்றுயிர்கள்பாற் கண்டாலும் இவள் மிக அஞ்சுவள். இவள் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு வருகையில் அதனாற் கலைக்கப் பட்ட ஒரு கருவண்டு தன் முகத்தண்டை பறந்துவருதல் கண்டு பெரிதும் வெருக்கொண்டு, அதற்கு ஒதுங்கிப்போய்த், தன்னைக் காக்கும்படி தன் தோழிமாரை அழைக்கின்றாள். அவடன் தோழிமாரோ அவள் அங்ஙனம் அஞ்சி வருந்துவதைக் கண்டு பகடி பண்ணுகின்றனர். அதனால், அவளினும் அவடன் றோழிமார் சிறிது வல்லென்ற நெஞ்சமுடையராதல் அறியப்படுகின்றதன்றோ? பெண்பாலார் ஆண்பாலாருள் வேறுபட்ட இயற்கையுடையாரை ஒருங்குவைத்து ஒப்பிட்டு நோக்கினால் மட்டுமே, அவர் தம்முட் காணப்படும் வன்மை மென்மைகளின் இயல்பு நன்கு புலனாகா நிற்கும். இங்கே துறவாசிரமத்தில் மென்குணங்களில் வளர்ந்த மகளிருள்ளும் வன்மை மென்மை சிறுசிறு வேறுபாட்டுடன் காணப்படுதலை, ஆசிரியர் காளிதாசர் சகுந்தலையினிடத்தும் அவளோடு உ ன்வளர்ந்த அவடன் றோழிமாரிடத்தும் வைத்துக் காட்டும் நுட்பம் பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று.

இன்னும், அன்பிலும் மென்றன்மையிலுஞ் சிறந்தார் எவராயிருப்பினும், அவர்பால் வாய்ச்சொற்கள் மிகுதியாய்க் காணப்படா.ஆண்பாலாரிலும் இவ்வியல்பினர் உண்டு. பெண் பாலரிலும் இவ்வியல்பினர் உண்டு. இவரெல்லாம் பெரும் பாலுந் தஞ்செய்கையினாலேயே தமதியற்கை பிறர்க்குப் புலனாக ஒழுகுவரேயல்லால், தம்வாயாற் பலப்பல சொற் களை மிகுத்துச் சொல்லார் மிகுத்துச் சொல்லாவிடினும் இவர் அவ்வக்காலங்களிற் கூறுஞ் சில சொற்களும் பொருள் நிறைந் தனவாய் ஆணித்திறமாய் இருக்கும். இங்ஙனமே அன்பிலும் மன் ற ன்மையிலுஞ் சிறந்தாளான சகுந்தலையுந் தன் றோழிமாரோடுந் தன் காதலனோடும் பேசுஞ் சொற்கள் சிலவாகவே காணப்படுகின்றன. தன் றோழிமாருடன் பேசுவனவும் அவ்வாசிரமத்திலுள்ள மரஞ் செடி கொடிகளின் அழகிய தோற்றத்தைக் குறிப்பனவாகவே யிருக்கின்றன (12,13). புதிது மலர்ந்த ஒரு மல்லிகைக் கொடி ஒரு தேமாமரத்தினைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/88&oldid=1578059" இலிருந்து மீள்விக்கப்பட்டது