சாகுந்தல நாடக ஆராய்ச்சி
67
மிக்காராய் ஒழுகும் நங்கையர்பால், அதற்கு ஏதமுண்டாகும் வழியும் பொறுமை வேண்டுவார், அவர்தங் கற்பொழுக்க வலிவும் மனத்திட்பமும் அறியாரே யாவரென விடுக்க, நாடகநூற் புலமையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சேக்குவீயர் என்னும் ஆங்கில ஆசிரியருந் தாம் வரைந்த கார்காலக் கதை என்னும் நாடகத்தில் வரும் ‘எரிமியோள்' என்னும் அரசியுந் தன் கணவன் தன்னைக் கற்பொழுக்கத்தில் வழுவியவளாகக் கருதித் தன்னைக் குறைகூறிய காலையிற், சகுந்தலையைப்போலவே, அவன்மேற் சினங்கொண்டு,
66
“அங்ஙன் ஒருகயவன் அறைந்தன னாயின் இங்ஙன் ஞாலத்து இழிதகவு நிறைந்த கொடியோன் ஆவன் அக்கொடியரிற் கொடியோன் தலைவ நீஎனைப் பிழைத்தறி தீயே!”
என அவனை இழித்துப் பேசினமை காண்க.
இவ்வாறு தமது கற்பொழுக்கத்துக்கு ஆகாதது ஒன்று நேர்ந்தக்கால் தமது நாணத்தையுந் துறந்து தமது உண்மை நிலையைப் புலப்படுக்கும் நங்கைமார், தமக்கு அத்தகைய இடர்நேரா வழியெல்லாம் நாணத்தின் மிக்கவராகவே ஒழுகாநிற்பர். இவ்வியல்பு சகுந்தலையினிடத்து மிக்குக் காணப் படுகின்றது. துஷியந்த மன்னன் கானகத்திற்போந்து இவளை முதன் முதல் எதிர்ப்பட்டு, “நுங்கள் தவவொழுக்கம் நன்கு நடைபெறுகின்றதா?" (14) என்று உசாவிய போதும், இவள் நாணத்தால் அவற்கு ஏதும் விடைகொடாமல் வாய்வாளாது நிற்ப, வ ன் றோழிமாரே அவன் வினாயவற்றிற்கெல்லாம் விடைதந்து அவனை மகிழ்வித்தல் காண்க. இந்தவாற்றால் இவள் தன் றோழியரை விடநாணத்தில் மிக்கவளாய்ப் புலனாகின்றாள். இன்னும், துஷியந்தன்மேல் அளவிறந்த காதல் அளவிறந்த காதல் கொண்டவளாய், அதனால் ஆற்றாமை மிக்கு வருந்துங் காலத்துந், தனக்கு இயற்கையே யுள்ள பெருநாணினால் அதனைத் தன் ஆருயிர்த் தோழியரான அனசூயை, பிரியம் வதைக்குந் தெரிவிக்க மாட்டாமற் பெருந்துயருறுகின்றாள். பின்னர்த் தோழிமாரே இவள் படுந்துயர்க்குக் காரணங் காதலாயிருக்கலாமென உய்த்துணர்ந்து, உள்ளத்திலுள்ளதை உரைக்கும்படி அவளை
வெள்
வள்