பக்கம்:மறைமலையம் 7.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 7

தன்

கூட

வற்புறுத்திக் கேட்க, அப்போதும் அவள், “எனக்குள்ள காதலோ மிகவும் வலிவுடையதா யிருக்கின்றது, அதைப் பற்றி என் தோழிமாருக்கும் நான் உடனே சொல்லக் ன் வில்லையே" (44) என்று தனக்குட் சொல் கின்றாள். பின்னும் பின்னுந் தோழிமார் வேண்டிக் கேட்ட பிறகும் அவர்க்கு அதனை அவள் புலப்படுத்து கின்றுழித், “தோழி, இத்தவ அடவியைப் பாதுகாப்பவரான அந்த அரச முனிவர் என் கண்ணிற் பட்டது முதல்” என்று பாதி சொல்லி, நாணத்தால் மேற்சொல்லற்கில்லாது நின்று விடுகின்றாள். அதற்கு மேல், தன்றோழிமாரின் உதவியால்தான் காதலனைத் தலைக்கூடுங் காலத்தும், நாண்மிக்கவளாய் அவனொடு மிகுதியாய் உரையாடாது அவனை விட்டுத் தன்றோழி மாரிடஞ் செல்லுதற்கே அவள் முயலுதலும் உற்று நோக்கற் பாற்று. பின்னர்த், தன் காதலன் தன்னை மருவியவுடன் அவனை விட்டுச் செல்கின்றுழி, “ஏ நெஞ்சமே! நின்னால் வேண்டப்பட்ட பொருள் நினக்கு எளிதிலே கிடைத்த பொழுது நின் நாணத்தை விடுத்தாயில்லை. இப்போது நீ அவனைப் பிரிந்து துயரமெய்திப் பரிவடைதல் ஏன்?” என்று அவள் தன்னுட் கூறிய சொற்கள் நாணம் மிக்க அவளது இயற்கையை நன்கு புலப்படுத்தல் காண்க.

66

இத்துணைச் சிறந்த நல்லியல்புகள் உடையளான சகுந்தலைக்குஞ் சிறிது பொறாமைக் குணம் இருப்பது அறியற் பாற்று. இவடன் றோழிமார் இவளைத் துஷியந்தனொடு தலைப்படுவிக்கு ஞான்று, அரசற்குக் காமக்கிழத்தியர் பலர் உளராதலை நினைவு கூர்ந்து, அங்ஙனம் பலரை நச்சியொழுகுமவன் தன் மாட்டு உண்மைக் காதலனாய் நடத்தல் யாங்ஙனம்? என்பது புலனாகத், தமது உவளகத்திலுள்ள மகளிரைப் பிரிந்தமையால் வருந்தி யிருக்கின்ற இவ்வரசரை வருத்தப்படுத்த வேண்டாம், விடு” என்று இவள் நுட்ப வறிவொடு நுவலும் உரைக்கண் இவளது சிறு பொறாமை தெற்றென வெளியாதல் காண்க. எத்துணை விழுமிய இயற்கை யுடையார்க்குஞ் சிறு சிறு குற்றங்கள் இருந்தாலல்லது அவ்வியற்கையின் விழுப்பந் திகழ்ந்து காணாது. ஒருபால் ஒளியும், ஒருபால் நிழலுங் காணப் படினல்லது ஓவிய உருக்கள் விளங்கித் தோன்றா, நறுமணங்

று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/93&oldid=1578101" இலிருந்து மீள்விக்கப்பட்டது