ய
சாகுந்தல நாடக ஆராய்ச்சி
69
உடன்
கமழுந் தாமரை, ஆம்பல், குவளை முதலான மலர்களும் அழகிய அகவிதழ்களுடன், அழகில்லாப் புறவிதழ்களும் ஒருங்கு பொருந்தப் பெற்றிருத்தல் காண்டுமல்லமோ? சுடர்ந்தெரியும் விளக்கொளியின் அடியிற் கரிய கறள் கட்டுதலுங் காண்டுமல்லமோ? எல்லாவுயிர்க்கும் இன்றியமையாதாய் ஒழுகும் இனிய யாற்றுநீரி னிடையே நுரை திரண்டு செல்லுதலுங் காண்டுமே? இராக்காலத் திருள் பருகி நீலவானிடையே பாற்கட்டியென வயங்கும் முழுமதியுங் களங்கமுடைய தாதல் காணாதார் யார்? ஆகவே, எத்துணைச் சிறந்த மக்களியற்கையிலுஞ் சிறவாத சிலவும் காணப்படுதலே அது தனக்கு ஒரு சிறப்பினைத் தோற்றுவியா நிற்கின்றது. மக்க ளியற்கையில் நலமும் நலமில்லனவும் இங்ஙனம் விரவிக் காணப்படுதலை நன்காய்ந்தறிந்து, அவ் விரண்டனையும் ஆண்டுள்ள படியே யெடுத்து விளங்கக் காட்டுந் திறம் நல்லிசைப் புலமை வாய்ந்த சிலர்க்கே உளதாம். ஏனையோர் மக்களியற்கையில் ஒருங்கு காணப்படும். இவ் விரண்டனையும் எடுத்துக் காட்டமாட்டாது, நல்ல தொன்ற னையே யாதல் தீயதொன்றனையே யாதல் மிகுத்துக் காட்டி இழுக்குவர். அவர் அவ்வாறு செய்வன கருத்து நன்றுடையார் பால் தீயதேதும் இராது. தீயதுடையார்பால் நல்லதேதும் இராது. என்பதேயாகும். இப்பெற்றியார் உயிர்கட்குப் பிறவி வந்ததன் நோக்கம் இன்னதென்று உணராதவரே யாவர். தீயது ஒரு சிறிதுங் கலவாத நல்லியல்பே யுடையார்க்குப் பிறவி ஏன் வரல்வேண்டும்? என அவர் உற்றுணர்ந்து காண்பாராயின், அங்ஙனங் கூறி இழுக்கார். மற்று, நல்லிசைப் புலமை மலிந்த ஆசிரியர் காளிதாசரே மேன் மக்களின் விழுமிய இயற்கை யைக் கொணர்ந்து காட்டு மிடத்தும், அவ்வியற்கையுள் விரவிக் காணப்படும் குறைபாடுகள் சிலவற்றையும் துருவி யாராய்ந்து அவை தம்மையும் ஆண்டுள்ளபடியே யெடுத்து உடன்கொணர்ந்து காட்டுதல் பெரிதும் வியக்கற்பால காள்கலனான
தொன்றாம். அன்பிற்கே ஒரு தூய
சகுந்தலையின் தூய உள்ளத்திலும், அவ் அன்பிற்கு மறுதலை யான பொறாமையும் ஒரு சிறிது விரவியிருத்தலை ஆசிரியர் எத்துணை நுட்பமாக விளங்கக் காட்டியிருக்கின்றார்