70
மறைமலையம் - 7
இனி, இங்ஙனம் பொறாமையுற்றுக் கூறிய சகுந்தலையின் சொற்களைக் கேட்ட அரசன், அவட்கு அது நீங்குமாறு வலியுறுத்திப் பகர்ந்த உறுதிமொழிகளைக் கேட்ட அளவானே, சகுந்தலை மேலேதும் உரையாளாய் அவன் சொற்களை நம்பிவிட்ட வாய்மையினை (56) உற்று நோக்குங் கால், அன்பின் மிக்கார் உரைகளை இவள் எளிதில் நம்பிவிடும் உள்ளப் பான்மை யுடையளாதல் தெற்றெனப் புலனாகா நிற்கின்றது. அங்ஙனம் நம்பியபின், அந் நம்பிக்கையில் உறுதியாக நிற்பதன்றி, அதனினின்றும் வழுவுதல் இவள்பாற் சிறிதுங் காணப்பட வில்லை. துஷியந்தன் சகுந்தலையை மருவிப் பிரிந்து தனது நகர் செல்கின்றுழித் தன்பெயர் பொறிக்கப்பட்ட கணையாழியை அவளது விரலிலிட்டு, ஆறெழுத்துக்களால் ஆகிய அப்பெயரின் ஒவ்வோர் எழுத் தையும் நாளுக்கு ஒன்றாக எண்ணிக் கடை யெழுத்தை எண்ண வரும் நாளில் தன் தூதுவன் சகுந்தலையைத் தன்நகர்க்கு அழைத்துச் செல்ல வந்து நிற்பன் என்று அவட்கு உறுதி மொழி புகன்று சென்றானென்பது அவனது துரையினின்றே போதருகின்றது (113). எனவே கானகத்திற் சகுந்தலையை விட்டுச்சென்ற அரசன், அங்ஙனம் விட்டுச்சென்ற நாளி லிருந்து ஆறாம்நாள் அவனை அழைப்பித்துக் கொள்வா னாகல் வேண்டும். மற்று, அவனோ அது செய்யாது அவளை முற்றுமே மறந்து போயினான். இந்நிலையிற் காதன்மிக்க மனைவிக்குந் தன் கணவன்பால் வருத்தமுஞ் சினமும் பகைமையுந் தோன்றாதிரா, என்றாலுஞ், சகுந்தலையோ தன்னை மறந்த தன் காதற்கணவனைத் தான் சிறிதும் மறவாளாய், அவனைப் பற்றிய நினைவு தன் உள்ளத்தை முழுதுங் கவர்ந்து கொள்ள அதன் வயப்பட்டவளாய்த், தன்னையுந் தன்னைச் சூழ நிகழும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கு மறந்த நிலையினளாய்க் காணப்படுகின்றனளே யல்லால் (74,75) தன் கணவன் தான்சொன்ன சொற் பொய்த்துத் தன்னை ஏமாற்றியது கண்டு அவன்மேற் சினமும் பகைமையும் கொண்டு அவனை அருவருத்து அவனை இகழ்ந்து பேசியவளாகப் புலப்படவில்லை. மற்றுச், சகுந்தலையின் தோழியான அனசூயையே "இரண்டகஞ் செய்த கயவனான ஒருவனுக்குப் பேதையளான எங்கள் தோழி தன்னைக் கொடுத்துவிடும்படி செய்த காமவேள் இப்போதாவது மனநிறைந்திருக்கட்டும்”