அவளது
சாகுந்தல நாடக ஆராய்ச்சி
71
என்று அரசனை இழித்து பேசுகின்றாள் (65). இவ்வாறு அரசனைத் சினந்து இகழும் அனசூயை நிலையோடு, அவனைச் சினத்தலையே அறியாத சகுந்தலையின் நிலையினை ஒப்பிட்டு நோக்குங்கால், தன்னாற் காதலிக்கப்பட்டான்மேற் றான் வைத்த அன்பு ஒன்றுமே நிரம்பித் ததும்புவதான தூய வுள்ளம் பிறி தோருணர்வுக்கு இடந்தரமாட்டாதாய் நிற்குந் தனிப்பெரு விழுப்பந் தெற்றென விளங்கா நிற்கும். சகுந்தலையின் மாசற்ற காதல் உள்ளப்பான்மையினை ன ஏனை மகளிர்ப்பாற் காண்டல் அரிதரிது பழந்தமிழ் மாதருட் கண்ணகியார் ஒருவர்மட்டுமே அத்தகைய விழுமிய ப தூய காதலுள்ளம் வாய்த்தவர். சகுந்தலையின் தூயவுள்ளப் பெருமையினைத் தெளிய அறிந்து புலப்படுத்திய காளிதாசரது நுண்மாண் நுழைபுலத்திற்குக், கண்ணகியாரது காதற்றூய கற்புள்ளம் பெருமையினை நன்குணர்ந்து தெருட்டிய இளங்கோவடிகளது அஃகி யகன்ற நல்லிசைப் புலமையே ஒப்பதாகும் என்க.
இனிச் சகுந்தலையின் உடம்பும் உயிரும் வேறெங்கும் காண்டற்கரிதான ஒரு தூய பேரன்பினால் ஊடுருவப்பட்டு அவ் அன்புருவாகவே ஒளிர்தலால், தன்னை மறதியினால் மறுத்துவிட்ட தன் காதலன், அம்மறதி நீங்கிப், பின்னர் ஏமகூடத்தின் கண்ணதான மாரீசரது தவப்பள்ளியில் தன்னை மீண்டுந் தலைப்பட்டு, அன்பினால் அகங்கரைந் துருகுதல் கண்டஞான்றும், அவள் அவன் செய்பிழையினை யெல்லாம் ஒரு தினையளவும் பாராட்டாது, அவன் செய்த அப்பிழையுந் தன் தீவினையால் நிகழ்ந்ததென்றே கருதி,
என்
"எம்பெருமான் எழுந்திருக்க! திண்ணமாகவே முற் பிறவியில் தூய அறவினைகளைத் தடை செய்த தீவினையானது அந்நாட்களில் தன் பயனை விளைவித்தது, அதனாலலேதான், இயற்கையில் இரக்க முடையராயிருந்தும் என் காதலர் அவ்வாறு என்னிடம் நடந்தனர்” (143,144) என்று மொழிந்திடுகின்றாள். தீம்பாலும் ஒரு காலத்திற் புளிக்கும், நறுமலருந் தன் மணத்தை இழக்குங், குளிர் மழையும் பெய்யுங்காலந் தவறும், ஆனால் சகுந்தலையின் தூய காதலுள்ளமோ பழி நினையாது, தன் காதலையும் இழவாது,