72
―
மறைமலையம் 7
அதனைப் பொழியுங்காற் பொழிவதும் பிழையாது. சேக்குவீயர் தமது அரும்பெரு நாடகக் காப்பியமாகிய சிம்பிலீனிற் கொணர்ந்து நிறுத்திய இமோசின் என்னும் இளவரசி, தன் காதலன் தனது கற்பொழுக்கத்தில் ஐயுறவு காண்டு தன்னை வாளினாற் போழ்ந்து படுக்குமாறு தன் ஏவலன் ஒருவனை ஏவ, அவ்வேவலன் அங்ஙனமே செய்வான் போல் அவனை ஒரு காட்டகத்துக் கொண்டுசென்று, தன் ரு தலைவன் தனக்கிட்ட கட்டளையினை அவட்கு எடுத்து ரைப்ப, அதுகேட்ட இமோசின் தன் காதலன் தன்னை அருவருத்தபின் தான் உயிர்வாழ்தலில் விருப்பமிலளாய்,
66
வருக, ஏட, வாய்மையை ஆகுக!
நின், தலைவன் இட்ட சொலைநிறை வேற்றுக! நீஅவற் காண்புழி ஏழையேன் பணிவிற்குச் சான்று மொழிமோ! ஏன்றெனை நோக்குதி உறையின் வாளை உருவுகென் யானே; பற்றுதி யதனை, வெட்டுதி யதனாற் குற்ற மிலாதஎன் காதல் அரணாஞ் செற்றமில் நெஞ்சத்தைச், சிறிதும் அஞ்சலை! வெற்றென உளதஃது வெந்துயர் ஒழிய;நின் தலைவனும் ஆண்டிலன், தொலைவில் செல்வமாய் ஆங்கவன் அமர்ந்ததூஉம் யாங்கா கியதே! மற்றவன் கட்டளை பொட்டெனப் புரிக!”
என்று கூறி அவ்வேவலன் தன்னை வெட்டிவிடுமாறு வற்புறுத்துதல் காண்க. தன் கணவனால் உவர்த்துக் கைவிடப் பட்ட துணையேயன்றி, அவனால் தன்னுயிர்க்கு இறுதிவருதல் நன்கறிந்த வழியுந், தான் அவன்மேல் வத்த தூய பெருங்காதலினின்று ஓரெட்டுணையும் மாறாத இமோசின் என்னும் மாதர்க்கரசியாரின் தூய மன நிலையே ஈண்டுச் சகுந்தலையின் மன நிலையினை உள்ளவாறு தெளிதற்கு ஓர் அரும்பெறல் எடுத்துக்காட்டாக நினைவிற் பதிக்கற் பாலதாகும் என்க.
அஃதொக்கும்மன், இத்துணைவிழுமிய உள்ளத்தளான சகுந்தலை, துஷியந்தனைக் கண்டவளவானே அவனியற் கையை ஆய்ந்துபாராதுந், தன் பெற்றோரது கருத்துடன்பாடு