பக்கம்:மறைமலையம் 8.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

குக்குடம்

161

போர்புரிதல்,

உதயத்திலெழுதல்,

சுற்றத்தோ

டுண்ணுதல், ஆபத்தடைந்தஸ்திரீயைக்காத்தல், என்னும் நான்கினையுங் கோழியினிடத்தினின்று கற்கவேண்டும்.

அச்சம்

காற்றினாலே மரங்களுக்குப் பயமும், பனிக்காலத் தினாலே தாமரைகளுக்குப் பயமும், வச்சிரத்தினாலே மலைகளுக்குப் பயமும், துர்ச்சநர்களாலே சற்சநர்களுக்குப் பயமுமுண்டு.

சுன்னாகம்,

சுபகிருது வருடம்

சித்திரைமாதம் 26ஆம் நாள்

இங்ஙனம்

அ. குமாரசுவாமிப்பிள்ளை

தொல்காப்பிய முழுமுதன்மை

இனி ஒரு தமிழ்நூல் அல்லதோர் செய்யுள் குமரிநாடு கடல்கொள்ளப்படுமுன் செய்யப்பட்டதெனத் துணிவு காண்டற்கு அக்குமரிநாடாக அக்குமரிநாட்டகத்தே கிடந்த பஃறுளி அல்லது குமரியாறாக அவற்றின்கண் மொழியப் படுதல் வேண்டுமென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. பலவேறு காலங்களிலிருந்த பலவேறு புலவர்கள் பாடிய செய்யுட்களைச் சிதர்ந்து போகவிடாமல் ஒருங்குதொகுத்து அவற்றை அகம்புறமெனக் கடைச்சங்கத்தார் வகுப்ப வழக்க முற்றுவருகின்றவற்றுட் புறநானூற்றிலே ஒருசில செய்யுட் களிற் கடல் கொள்ளப்படு முன்னிருந்த பஃறுளியாறு கிளந்தெடுத்துக் குறிக்கப்படுதலால், அச்செய்யுட்புலவர் காலமும் அப்புலவரோடொருங்கிருந்து செய்யுள்கொண்ட அரசர்காலமும் குமரிநாடிருந்தகாலமேயாமென்ப தினிது விளங்கும். பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப்பெரு வழுதியை நெட்டிமையார் என்னு நல்லிசைப்புலவர் தாம் பாடிய “ஆவுமானியற்பார்ப்பனமாக்களும்” என்னுஞ் செய்யுளில் அவனை வாழ்த்துகின்றுழி "முந்நீர்விழவினெடி னடியோன், நன்னீர்ப் பஃறுளிமணலினும்பலவே" எனப் பஃறுளியாற்றைக் கிளந்தெடுத்துக் கூறக்காண்டலால் அவர்காலம் பஃறுளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/186&oldid=1574603" இலிருந்து மீள்விக்கப்பட்டது