பக்கம்:மறைமலையம் 8.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

163

பனம்பாரனார் செய்ததன் றென்றுரைத்த ஆப்தரவர்களுரை பொருத்தமின்றாம். அற்றேல், குமரிநாடு கடல்கொள்ளப் பட்டபின் பலவாயிர வருடங்கழித்தெழுந்த நன்னூற்பாயிரச் செய்யுளிற் ‘குணகடல் ல் குமரிகுடகம் வேங்கடம்' என நில

வல் வல்லை கூறியதென்னையெனின்; செந்தமிழ்த் தனிமொழிப்புறஞ் சிறிது மலையாளங் கன்னடம் துளுவம் ம் முதலிய மொழிகளாகத் திரிந்து வேறுபடத் தென்றமிழ்த் தனி யகஞ்சிறிது குறுகுங்காலத்தே அந்நூலெழுதப்பட்டதாகலின் அதற்கேற்பச் செந்தமிழ் மணங்கமழாநிற்கு நிலவெல்லை வரையறுத்தற்பொருட்டு அங்ஙனங்குறுக்கி நான் கெல்லை கூறினாராகலின் அஃது ஈண்டைக்கேலா தென்றொழிக. தொல்காப்பியஞ் சிறு காக்கைபாடினியம் எழுதப்பட்ட காலத்தே செந்தமிழ்மொழிப்பெருமை மேல்கீழ்பாலெல்லா மொருங்கு கவர்ந்து விரிந்ததாகலின், அவர் நூற்பாயிரங் கட்குக் கடலெல்லை கூறினாரென்க. இனித் தொல்காப்பியத் தின்கட் காணப்பட்ட அப்பனம்பாரனர் பாயிரச் செய்யுளையே தொல்காப்பியனார் செய்ததெனக் களவி யலிற் காணப்பட்டது அச்சியற்றினோரால் நிகழ்ந்த பிழை பாடாகலின் அஃதீண்டைக்குப் பயன்படாமையறிக. அல்லதூஉம், அது பனம்பாரனார் சய்ததன்றாயின் உரையாசிரியன்மாரெல்லாரும் அதனை ஏன் அவ்வாறு கூறினார்? என்றுய்த்துணரவல்லார்க்கு அப்பாயிரச்செய்யுள் செய்தார் பனம்பாரனாரென்பது தேற்றமாம். இனிப்பஃறுளி யாற்றைக் கிளந்தெடுத்துக்கூறிய நெட்டிமையார் செய்யுளிற் 'பார்ப்பனமாக்கள்' விதக்கப்படுதலால் அவர்காலத்திற் பார்ப்பன வகுப்பிருந்ததென்பது பெற்றாம். ஆப்தர் சவரிராயரவர்களும், "அந்தணரெனத் தமிழ்நூலுட் கூறப்படுவோர் ஆரியப்பிராமணரல்லர், அவர் தமிழ் நாட்டற வோரே” என்று கூறுதலால், அவர் கட்கும் இதுவே கருத்தாம்போலும். இங்ஙனமாகலின் ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்னுஞ் சூத்திரத்தை ‘இடைச்செருகல்' என்று ரைப்பதற்கு ஒருப்படுவார்மற்றியார்? இன்னுந் தொல்காப்பியம் எழுதப் பட்டகாலத்தே செந்தமிழ்நாட்டின் கண் வழங்கிய செந்தமிழ் மறைகள் நான்காமென்பதும், அந்நான்மறைவல்ல துறவோரா லறிந்து வழிபடப்பட்ட கடவுள் சிவபெருமானே யாமென்பதும்,

6

-

சிவபெருமானேயாமென்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/188&oldid=1574605" இலிருந்து மீள்விக்கப்பட்டது