பக்கம்:மறைமலையம் 8.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் -8 8

அது சிவந்த நிலத்தில் வசிக்குமாம். அந் நிலத்திற்குச் செவ்வண்ணம் அதுகொலைசெய்த மக்களின் இரத்தத்தால் உண்டானதாம். முன்நரபலியிட்டுவந்த விவர் ஐரோப்பியர் கூட்டுறவால் மிருகபலியிடுகின்றனர். இந்தத் தெய்வம் பூகம்பத்திற்கு அதிட்டான தேவதையென்று சொல்லப் படுகின்றது. ஒருதரம் குமாசி என்றவிடத்தில் சிறியதோர் பூகம்பமுண்டாய் அரசனிருப்பிடத்தின் ஒரு பக்கத்துச் சுவர் விழுந்துபோகவே, அரசன் குருமாரை அழைப்பித்து இஃதென்னென்று வினாவ, அவர் இது சாசாபோன்சம் என்னுந் தேவதையால் நிகழ்ந்தது. கன்னிப் பெண்கள் இரத்தத்திற் சேறுகுழைத்துத்தான் அழிந்த இச்சுவரை எழுப்பல்வேண்டு

மனக் கூறவே அரசன் ஐம்பது இளம்பெண்களைக்கொன்று அவ்வாறே செய்வித்தனனாம்.

இன்னும் பொற்கரைப்பக்கங்களிலுள்ளோர் வழிபடுந் தெய்வங்களில் போக்சம் என்னுந் தெய்வம் மிகச்சிறந்ததாம். அது துன்பங்கள் பலவற்றைப் பயப்பதொன்றாம். நரபலி யிடுதலும் வியரிபிசரித்தலும் ஏனைக்கொடுந்தொழில்கள் பலவும் இவருள் விசேடமாயிருக்கின்றன. சிலபலநாட்கள் அவர் களுடைய கிராமதெய்வங்கட்குப் பரிசுத்த பரிசுத்த முடையன வாமென்றும், அந்நாட்களில் அவர்களுள் யார் என்ன வேண்டினும் அவற்றை முடிப்பித்தற்கு அவர்கள் குருமார் சித்தமாயிருப்பரென்றும் சொல்லுகின்றார். கிராம தெய்வ மொன்று வசிக்கின்ற வோரிடத்திலுள்ள செடி, மரம், நிலன் இவற்றை யார்கெடுக்கின்றார்களோ அவர்கள் பெரியதோர் அபசாரம் செய்தாராதலால் அவர்கள் மரண தண்டனைக் குள்ளாகல் வேண்டுமாம். ஒவ்வோர் கடவுளும் தனக்கியைந்த ஒவ்வோராற்றால் தன்னை வழிபடுவார்க்கு உதவிபுரிகின்ற தெனவும், அவற்றுட் போர்க்கடவுள் அவர்கட்கு மனவெழுச்சி மிகுவித்து மாற்றாரையழிக்கின்றதெனவும், கொள்ளைநோய் வருவிக்குங் கடவுள் பகைவர்பால் அந்நோயை விளக்கின்ற தெனவும், யாற்றுக்கடவுள் அப்பகைவர் யாறுகடந்து மேற் செல்லாமை அவரை ஆண்டேநீரிலமிழ்த்துகின்றதெனவுங் கூறாநிற்பர். இன்னும், பட்டினங்களிற் சந்தைகளிலிருக்கும் வகுப்பார் தம்மைப் பாதுகாக்குங் கடவுளரைக் குருமார் வழியே கிராமதெய்வங்களினின்றும்

பெற்றுக்

காள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/217&oldid=1574636" இலிருந்து மீள்விக்கப்பட்டது