பக்கம்:மறைமலையம் 8.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மறைமலையம் 8 –

6

இனி, ஆங்கில மகனான இன்ஸ் என்பவர் ஞானசம்பந்தர் முதலான குரவன்மார் மூவருள் யாரும் மாணிக்கவாசகரைத் தம்பதிகத்துட் கிளந்தெடுத்துக் குறித்திடாமையான் அவர் அம்மூவர்க்கும் பின்னிருந்தாரென்பது உய்த்துணரற்பாற் றென்றல் தருக்கநெறி பிறழாது வாதிடுவார்க்கு யாங்ஙனம் பொருந்தும்? ஒருவர் ஒருவரைத் தந்நூலுட் கிளந்து கூறாமை யானே அவர் அவர்க்கு முன்னிருந்தார் பின்னிருந்தாரெனத் துணிபு தோன்ற வுரையாடுதல் சரிதமுறையாகுமா? ஞான சம்பந்தர் முதலானகுரவன்மார் பண்டைத் சிவனடியார் வரலாறு களெல்லாம் நெறிப்படவெழுதிவந்து இ டையே அவரைக்குறித் தேதும் மொழிந்ததில்லையாயின், அது கொண்டு மாணிக்க வாசகர் அவர்க்குப் பின்னிருந்தாரென ஒருவாறு கூறிடலாம்; மற்று ஞானசம்பந்தர் முதலான குரவன் மாரோ அங்ஙனமேதும் வரலாறுரைத்து நூலெழுதினா ரில்லை; தாஞ் செல்லுஞ் சிவாலயங்களுள் அருட்குறி தோன்ற வெழுந்தருளிய பெருமானைக் குழைந்துருகி வழுத்தித் திருப்பதிகங்கள் கட்டளையிட்டருளிச் செல்லுங் கடப்பாடு மேற்கொண் டொழுகினார்கள்; அங்ஙனம் ஒழுகலாறுடை யரான அவர் திருப்பதிகங்களுள் முன்னைக்காலத்துச் சிவனடியார் சிலர் மொழியப்படினும் படுவர், மொழியப்படா தொழியினு மொழிவர்; திருவருள் தம்மை இயக்குமா றெல்லாஞ் சென் றியங்கவல்லரான அக்குரவன்மார் நியதி கொண்டு அங்ஙனஞ் சிவனடியார் பெயரோதாமையான், அவரோதாமைபற்றியே மாணிக்கவாசகர் அவர்க்குப் பின்னிருந்தாரெனக் கூறுதல் ஒரு சிறிதும் அடாத ாத போலி யுரையா யொழியும், அல்லதூஉம், யாம் மேலே காட்டிய நரியைக் குதிரை செய்வானு நரகரைத்தேவு செய்வானும் என்னும் அப்பர் சுவாமிகள் திருவாக்கானே மாணிக்கவாசகர் பொருட்டியற்றப்பட்ட அற்புதத் திருவிளையாடல் விளங்குதலின், மாணிக்கவாசகர் அக் குரவன்மார் யாரானு மொழியப்படவில்லை என்பதும் யாண்டைய தென்றொழிக.

66

இனிது

அற்றன்று, முன்னைக்காலத்துச் சிவனடியார் தம்மை யெல்லாந்தொகுத்தோதிவழுத்துவான் புகுந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசகரையும் அங்ஙனம் எடுத்து மொழிந்த தில்லை யாலோவெனின்; நன்றேவினாயினாய், மாணிக்க வாசகர் ‘அதெந்துவே யென்றருளாயே' 'என்னுட விடங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/289&oldid=1574713" இலிருந்து மீள்விக்கப்பட்டது