பக்கம்:மறைமலையம் 8.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

283

ஏறக்குறைய 4500 கனவடி சுத்தவாயு வேண்டும். குதிரை, மாடு, எருமை முதலிய பெரிய விலங்குகளுக்கும் மணிக்கு 10000 முதல் 20000 கனவடி வாயு அவசியமாதலால், அவைகள் திறந்த வெளியிலேயே அதிகமாய் வசித்து வரல் வேண்டும். இதனால், அவைகளின் தொழுவும் திறந்த வெளியி லமைக்கப்பட்டிருக்க வேண்டு மென்பது தெற்றென விளங்கும். இது நிற்க, 3000 கனவடிகொண்ட அறை ஒருவனுக்கு வாய்ப்ப தரிதாதலானும், மணிக்கு மூன்று தடவை புதிய வாயுவை மாற்றிக் கொள்ள லாமாதலானும் 1000 கனவடியுள்ள அறை நம்மவ ரொவ்வொரு வருக்கும் அவசியமென்பது ஈண்டு சொல்லாதே அமையும். அவ்வாறாயின் 1000 கனவடிக் கதிகமான ஓரறையி லொருவன் வசிப்பின், அன்னவனடையும் பயன் யாவையோ வெனின் கூறுதும்:-

1. சிற்றறையின் றன்மைபோல வாயுவை அடிக்கடி மாற்ற லநாவசியம்.

2. இல்லத்தின் வாயு மிகுந்து பரந்து கிடத்தலால் ஒரு வாயில் வழிப்புகுந்த வெளிவாயு தன்வேகம் உள்வாயுவால் பலவாகப் பிரிக்கப்பட்டு உள்ளிருப்போன் உணராதவாறு வலிமை குன்றுகின்றது.

3. வாயுவின் ஓட்டம் சிறிது நேரம் தடைப்படினும், உள்வாயு அசுத்தமாகும் விகித மதிகப்படாது.

4. மிகுந்த பரப்பை வியாபிக்க வேண்டியிருப்பதால் சிற்றறையினும் பேரறையில் புகும் புறவாயு அதிகமாய் உபயோகிக்கப்படுகின்றது. இவற்றால் பேரறையே மிக்கபயன் விளவிப்பதா மென்றுணர்ந்து கொள்க.

இனி நாம் புறம்போக்கும் வாயுவின் கண்ணுள்ள அசுத்த வாயுக்களிற் சில துரிதமாய் 12.14. அடிக்குயரமாய் வியாபித்துச் செல்லுந் தன்மையனவாகாமையான், 14. அடிக்குயரமான சுவரை எழுப்புவது பொருளுக்கு வீணழிவேயாம். ஆகையால் 1000 கனவடி அறை ஒருவனுக்கவசியமாதல்போல் (1000 /14) 72. சதுர அடியுள்ள தளமும் அவசியமாம்.

இல்லத்தின் வாயு அசுத்த மடைகிற விகிதத்தையும், சுகத்தைப் பேணவேண்டிய வாயுவின் பரிமாணத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/308&oldid=1574734" இலிருந்து மீள்விக்கப்பட்டது