பக்கம்:மறைமலையம் 8.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

ம்

(6

295

வெள்ளிடைமலைபோல் விளங்கித்தோன்றும் ஞாயிறுதிங்கண் முதலியவற்றின் வழிபாடு இருக்குவேத பூர்வபாகங்களில் னிது காணக்கிடத்தலானும், இருக்குவேதவிறுதிப் புருட சூத்த மந்திரவுரையின்கண்ணே இறைவனுக்கு அவயவப் பாகுபாடுகள் நன்றெடுத்துச்சொல்லப்பட்டமையானும், மிகப்பழைய கேனோப நிடதத்தில் முதல்வன் இயக்கவுருவந் தாங்கித் தோன்றித் தேவர்க்கு அருள்செய்த வரலாறு விரித்துக்காட்டப் படுதலானும், பின்னெழுந்த கைவல்லியம், அதர்வசிகை முதலிய வுபநிடதங்களினும் உமாசகாயம் பரமேசுவரந் திரிலோசனம் நீலகண்ட முதலிய வுருவத்திருவடை யாளங்கள் கிளந்தெடுத்து மொழிந்திடப்பட்டமையானும், புறத்தே அண்டசரீரத்திற்கு இதயத்தானமான சிதம்பரத்திற்றிரு நடங்குயிற்றும் முதல்வனை வழிபடுமாறுபோல அகத்தே பிண்டசரீரத் தினிதயத் தானத்துள்ள பரமலியோமத்தின் கண்ணே நடமிடும் ஆனந்தத் தாண்டவ மூர்த்தியையறிந்து வழிபடுமாறு விதிக்குந் தகரவித்தையி னியல்பு சாந்தோக்கிய முதலான பிராசீன உபநிடதங்களில் வகுத்துக் கூறப்படுத லானும், யோகநூல் செய்த பதஞ்சலிபகவானும் பிரத்தியா காரந் தாரணை முதலான யோகப்பயிற்சியி னெல்லாம் றைவனைக் குறிகளானறிந்து வழிபட்டு உள்ளத்தை ஒருமையுறுத்துகவென்று விதித்தலானும், மக்களின் அளவை யுணர்வைப் பாகுபடுத்துக் கூறிய நியாயம் வைசேடிகம் முதலான நூலுடையார்க்கும் அஃதொப்ப முடிந்தமையானும், வேதாந்த நூல்செய்த வாதராயண ரெனப்படும் வியாசபக வானுந் தமது பிரமமீமாஞ்சையின் பிரதமோத்தியாயந் துவிதீயபாதம் 11-வது என்னுஞ் சூத்திரத்தானே இதயக் குகையின் கண் இறைவனை வழிபடுந்தகரோபாசனை எடுத்து மொழி தலானும், வேதோபப்பிருங்கணங்களான பதினெண் புராணங் களினும் சிவரகசியம் பாரதம் இராமாயணம் முதலான விதிகாசங்களினும் முதல்வனருட்குறிநிறுத்த வாலயவழிபாடு காணப்படுதலானும், தேவரும் முனிவரும் றைவனுடைய அருளுருவத்திருமேனியை வழிபட்டு ஆங்காங்குப் பிரதிட்டை செய்த தேவாலயங்கள் இப்பரத மாகண்டமியாங்கணும் பரந்துபட்டுக் கிடத்தலானும்,

அத்தேவாலய வழிபாடுதானும் பிற்காலத்ததன்றிப்பல்லாயிர வருடங்கட்கு முன்னதான பண்டைக்காலந்தொட்டு நடைபெற்று வருதலானும், ஆரியப்பிராமணர் நாடோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/320&oldid=1574746" இலிருந்து மீள்விக்கப்பட்டது