பக்கம்:மறைமலையம் 8.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

❖ LDM MLDMOED - 8❖ மறைமலையம் லயம் –

அத்தியயனஞ்செய்து போதரும் காயத்திரி மந்திரவுறையுளில் இரண்மயவுருவனான இறைவன் பர்க்கனென்னுந் திருநாமத் தோடுகூடி விளங்கலானும், ஞானசம்பந்தப் பிள்ளையார் முதலான அருட்குரவரும் முதல்வனருளுருவத் திரு திருமேனி வழிபாட்டிற் றலைநின்றமை எல்லாரானு மறியப்படுதலின் அஃதான்றோராசாரமாய் நிலையுதலானும், பிறவாற்றானும் அங்ஙனங்கூறும் பிரமச மாசத்தாருரை பொய்படுபோலி யுரையாதல் தெளியப்படு தலின் அவரார வாரவுரை பற்றி மயங்குவார் ஈண்டு யாருமிலர். இவர்கூறும் போலிவாதப் பொய்ப்பொருளெல்லாம் மிக நுண்ணிதாகவெடுத் தாராய்ந்துமறுத் துண்மைப்பொருள் காட்டி அர்ச்சாதீபம் என்னும் ஓரரிய பெரியநூல் பிரகடனஞ் செய்தார் எம்மாசிரியர் ஸ்ரீலஸ்ரீசோமசுந்தரநாயகரவர்கள். அவ்வரிய நூன்மேல் வேறு சொலவறியாமற் பிரமசமாசத் தாரும் வாய்வாளாதடங்கினர். சகளோபாசனை யியல்புபற்றி இன்னும் விசேடமாயறிய வேண்டும் அன்பர்கள் அர்ச்சாதீப மென்னும் அவ்வரிய பெரியநூலை ஆராய்ந்தறியற்பாலார்.

இனி இதுகாறும் விரித்ததருக்கவுரையால் இப்பரதமா கண்டத்தின்கணுள்ள நன்மக்களீசுரனருளுருவத் திருமேனியிற் செய்து போதரும் வழிபாடு சகளோபாசனை யாவதன்றி விக்கிரகவாராதனையாதல் ஒரு சிறிதுஞ் செல்லாதா மென்பதூஉம், சகளகோலத்தின்கட்செய்யும் வழிபாடுபற்றி இறைவனது வியாபகமுழுமுதன்மை இறைமைக் குணத்திற்கு வரக்கடவதோ ரிழுக்கில்லை யென்பதூஉம், அருவமாக ஈசுரனைத் தியானிக்க வல்லோ மென்பாருரை மக்கள் மனைவியற்கைக்குத் தினைத்துணையு மியைதல் செல்லாமை யால் அது வெறுஞ்சொன்மாத்திரையாகவே முடிதலல்லது பொருணிறைந்த தாகாதென்பதூஉம், உலகத்தின்கண் அநாகரிய விருத்தியுடையரான மக்களுள்ளும் உருவ வழிபாடே காணக்கிடத்தலின் அவ்வியற்கைக்கு வேறாக மொழிதல் முரண்பாடாமென்பதூஉம், ஆரியவேதோப நிடதங்களினும் அவற்றின் உபப்பிருங்கணங்களினும் அருளுருவத்திருமேனி வழிபாடே பெறப்படுதலின் அவ் வுண்மை யறியமாட்டாது வழுக்குரையாமென்பதூ உங்

திறம்பியுரையிடுவாருரை

ப்பட்டன ன வென்க.

காட்டப்பட்ட

சகளோபாசனை முற்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/321&oldid=1574747" இலிருந்து மீள்விக்கப்பட்டது