பக்கம்:மறைமலையம் 8.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

ம்

311

தால்காப்பிய னாரும் இக்குற்றங் கூறாமையின்” என்றும், தொல்காப்பிய வுரையில் “இனி ஆனந்த வுவமை யென்பன சிலகுற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுபவாகலின் அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள் தாம் அகத்துள்ளும் பிறசான்றோர்செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனாராற்செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்தவோத் தென்ப தொன்று செய்தாராயின் அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாகவந்த சான்றோர் செய்யுங்குற்றம் வேறுபடா வென்பது” என்றுந் தடைவிடை களாற் காட்டி ஆனந்தவோத்து அகத்தியனார் செய்தா ரென்பதிற் றமக்குடம்பாடு மறுத்த லென்னை? இவர்தா மிங்ஙனம் மறுத்துக்கூறினும் ஏனை யுரையாசிரியரு மிவற்றை எடுத்தாளாத தென்னை? என்று கடாவுவார்க்கு றுக்கு மாறின்மையின் அச்சூத்திரங்கள் அகத்தியனார் செய்தவாதல் செல்லாதென்க. அகத்தியனார் பெயரானும் ஔவையார் திருவள்ளுவர் பெயரானுங் கட்டி நடத்தப்படும் பாட்டுக்கள் போலவையுங் கொள்ளற் பாலனவாம்.

இனி ஆசிரியர் - தொல்காப்பியனார் பயனில்லவற்றைக் கிளந்து கூறாது புறனடையா லுய்த்துணரவைப்பராகலின் அதுபற்றி அவ்வானந்தக்குற்றங்கொள்ள வமையுமெனின்;- அகத்தியனார் கூறியதொன்றை அங்ஙனம் ஒழிபாற் கொள வைத்தாராயின் அவ்வாறு கோடலுமாம்; அகத்தியனாரே அங்ஙன மொன்று கூறினாரென்பதற்குப் பிரமாண மில்லாமை யானும், பிரமாண முண்டென்பாரை ஆசிரியர் - நச்சினார்க் கினியர் மறுத்தலானும் அவ்வாறமைத்துக்கோடல் யாண்டை யதென் றொழிக.

இனி, ஆசிரியர் - சிவஞானயோகிகள் இலக்கணவிளக்க வாசிரியரை மறுத்து ‘மலையுமகளென அமங்கலப் பொருடந்து தொகையார்பொருள் பலவாய்த்தோன்றிற்று என்று கூறுதலின் அவர்க்கு அவ்வானந்தக்குற்றங் கோடல் உடம்பாடா மென்று நண்பரவர்கள் மொழிந்தனர். அதுபொருந்தாது மங்கலமொழிமுதல் நிறுத்துக்கூறினாமென்றுரைத்த இலக்கண விளக்க வாசிரியர் தாமேற்கொண்டதற் கேற்பக் குற்றம்படாது மங்கலம் வகுத்துக் கூறல்வேண்டும்; அங்ஙனங் கூறவறியாமற் றாம்மேற்கொண்டதற்கு மறுதலைப்பட அதனைக் குற்றம்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/336&oldid=1574762" இலிருந்து மீள்விக்கப்பட்டது