பக்கம்:மறைமலையம் 8.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

திருநாவுக்கரசுநாயனார் தேவாரம்

பின்னுவார் சடையான்றன்னைப் பிதற்றிலாப்பேதைமார்க டுன்னுவார் நரகந்தன்னுட் டொல்வினை தீரவேண்டின் மன்னுவான் மறைகளோதி மனத்தினுள் விளக்கொன்றேற்றி யுன்னுவா ருள்ளத்துள்ளே யொற்றியூ ருடையகோவே.

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா

323

கற்றவர்விழுங்குங் கற்பகக்கனியைக் கரையிலாக் கருணைமாகடலை மற்றவரறியா மாணிக்கமலையை மதிப்பவர்மன மணிவிளக்கைச் செற்றவர்புரங்கள் செற்றவெஞ்சிவனைத் திருவீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன்றன்னைக் கண்டுகண்டுள்ளங் குளிரவென்கண்குளிர்ந்

எனக் கூறியவாற்றாலுணர்க.

மனத்தினால் வழிபடுதல்

தனவே

அரக்கானது வெயிலின்முன் வெதும்புதல் போன்ற மந்ததர அன்பும், மெழுகானது வெயிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போன்ற மந்தஅன்பும், நெய்யானது சூட்டுக்கு இளகுதல்போன்ற தீவிர அன்பும் இன்றித் தைலதாரையானது சிறிதும் இடையறாது ஒழுகுதல்போல ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகுந் தீவிரதர அன்பினாற் கருதுவாரது இருதய தாமரையின்கண் அவர்கருதிய திருவுருவோடு விரைந்து சென்றருளும் முதல்வனது மாட்சிமைப்பட்ட திருவடிகளை இடைவிடாது மனத்தினால் நினைத்தவர் தேவலோகம் இந்திரலோகஞ் சத்தியலோகம் வைகுண்டலோகம் ஸ்கந்த லோகம் கணபதிலோகம் சத்தியலோகம் சிவலோகம் என்னும் பதமுத்தி ஸ்தானங்களைக் கடந்த பரமுத்திஸ்தானமாகிய வீட்டுலகின்கண்ணே நித்தியராய் நிரதிசயவின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருப்பர்.

மாயாகாரியமாகிய உலகத்தின்கண்ணே சத்தம், பரிசம், உருவம், இரதம்? கந்தங்களாகிய ஐந்தனுள் ஒரு பொருளையும் விரும்புதலும் வெறுத்தலும் இல்லாதவனது ஸ்ரீபாதார விந்தங்களை எவ்விடங்களினும் எக்காலங்களிலும் இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/348&oldid=1574774" இலிருந்து மீள்விக்கப்பட்டது