பக்கம்:மறைமலையம் 8.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

327

பரிபாகிகளாகிய சபையோர் உய்யவந்தவர்கள்; மெய்யே கறைக்கண்டத்தெம் மண்ணல் பாதம் நண்ணி அவன்பூசை அவனடியவர் வழிப்பூசை பண்ணியே உய்வார்கள் எனக்கண்டோர்கள் சோதிக்கவேண்டாமல் சுடர்விட்டுள எங்கள் சோதியுண்மையையே வாதிக்கும் பலமிண்ட வாய்மதமாயவும், சைவாமிர்தம் பரவிப்பாயவும். சைவத்திரு முறைகள், திவ்ய சாத்திரங்கள் ஈட்டிநோக்கக்கொடுத்து நுதலிய வுண்மைகளைப் புகட்டிப்பிரசங்கித்தலாற் சித்தந்தெளியவும், சமையகுரவர்கன் முதலியமெய்யடியவர் திருநாள்கள் கொண்டாடவும், கொண்டாட்டங்கண் டுலகமுய்யவும், அங்ஙனஞ் செய்வித்து வரும் அப்பெரியோர்கள் ஒருங்கு சேர்ந்து அளவளாவவும், தம்மயமாக்கப்படும் நாள்குறுகில் குறுகுமேனையோர் சாருமிடமாகவும், அரிய திருமுறைகளாம் சைவத்திருமுறைகள் சாத்திரங்கள் தோத்திரங்கள் அமையுஞ் சாலையாகவும், அடிகள் அடியார்கள் திருவுருக்களி னழகிய படங்கள் பிரதிட்டிக்கப்படும் ஆலயமாகவும் இவர்களுக்கு வாய்த்தநல்லகம் நாகைவெளிப் பாளையத்தில் வாழ்வாங்கு வாழும் ஸ்ரீமான் கணபதியாபிள்ளை யவர்களின் இல்லங்களில் ஒன்று. இதைச் சைவசித்தாந்த சபைக்குரிய சபாக்கிரகமாக்க இராமநாதபுரம் சமஸ்தானம் மஹா இராஜா சேதுபதி மஹாராஜா அவர்கள் பொருளுதவும் பாக்கியங் கொண்டனர்.

-

பல

இச்சபையோர்களின் அக்கிராசனாதிபதி ஸ்ரீமத் வீரப்ப செட்டியாரவர்கள், மஹாராஜா அவர்கள் கொடுக்கக்கருதிய பொருளையேற்குமுயற்சியில் தளராது அடுத்துக் கேட்டுப் பெற்றுச் சபைக்கிடம் உரிமைப்படுத்தித் தாமும் தாம் வகித்த அக்கிராசனாதிபத்தியம் சிறக்கப்பெற்றனர்.

இவர்களில் எவ்வெவர் பெற்றபேறும் எம்போலிகளின் சீருக்குவந்ததே யாகையால், பயன்பெற நிற்பவர்களில் கடையனேன் மகிழ்ச்சியில் தலைதடுமாறி யெழுதின இதில் குற்றம் பாராமல் பத்திரிகையில் பிரசுரிக்கில், நாகைவெளிப் பாளையம் சைவ சித்தாந்த சபையோர் பெரிதுங் தங்கட்குக் கடமைப்பட்டவராவர்.

இங்ஙனம்,

மதுரைநாயகம்பிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/352&oldid=1574778" இலிருந்து மீள்விக்கப்பட்டது